Advertisment

ஃபாஸ்டாக் பேலன்ஸ் தெரிஞ்சுக்கனுமா? அப்போ இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்க!

FASTag Balance Check : உங்களின் வேலட்டில் பேலன்ஸ் இல்லையென்றாலும் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக அலெர்ட் கிடைத்துவிடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஃபாஸ்டாக் பேலன்ஸ் தெரிஞ்சுக்கனுமா? அப்போ இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்க!

FASTag,FASTag news,FASTag news in tamil,FASTag tamil news,FASTag online,FASTag sbi,FASTag state bank of india,FASTag Balance,FASTag Balance check, FASTag Balance check sms,FASTag Balance missed call,How to find FASTag Balance,

FASTag Tamil News, How To Check FASTag Balance: ஆர்.எஃப். ஐ.டி மூலமாக இயங்கும் டேக்குகளை நீங்கள் வாங்கி, உங்களின் வங்கி கணக்குகள் அல்லது வாலெட்களுடன் இணைத்து உங்கள் காரின் முன் பொருத்தினால் போதும். உங்களின் டோல் பூத் கட்டணங்கள் எல்லாம் தானாக வசூல் ஆகிவிடும். ஆனால் சிலருக்கு அனைத்து நேரத்திலும் டோல் பூத் கட்டணங்கள் மற்றும் பேலன்ஸ் குறித்து கணக்கில் வைத்துக் கொள்ள இயலாது. அப்படி இருக்கையில் நம்முடைய ஃபாஸ்டேக்கில் இருக்கும் பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி?

Advertisment

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மேற்பார்வையில் இயங்கும் இந்தியன் ஹைவேஸ் மேனேஜ்மெண்ட் கம்பெனி லிமிட்டட் வாகன ஓட்டிகளின் தலைவலிக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஒரு வசதியை உருவாக்கியுள்ளது. உங்களின் தொலைபேசி எண் என்.எச்.ஏ.ஐ ப்ரீபெய்ட் வாலட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் உங்களின் பேலன்ஸை உடனே தெரிந்து கொள்ளலாம்.

+91-8884333331 என்ற டோல் ஃபிரி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து உங்கள் ஃபாஸ்டாக்கின் பேலன்ஸை அறிந்து கொள்ள இயலும். உங்களின் போன் நம்பர் என்.எச்.ஏ.ஐ ப்ரீபெய்ட் வாலட்டுடன் இணைக்கப்படவில்லை என்றால் இந்த முறையில் பேலஸை தெரிந்து கொள்ள இயலாது. ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களுக்காக என்.எச்.ஏ.ஐ ப்ரீபெய்ட் வாலட்டுடன் உங்களின் போன் நம்பர் இணைக்கப்பட்டிருந்தால் அனைத்து அக்கௌண்ட்டுகளின் பேலன்ஸூம் காட்டப்படும். உங்களின் வேலட்டில் பேலன்ஸ் இல்லையென்றாலும் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக அலெர்ட் கிடைத்துவிடும்.

மேலும் படிக்க :  பறையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் : மெட்ரோ விழாவை ரசிக்க இது தான் நல்ல வாய்ப்பு!

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment