ஃபெடரல் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைக்கான நிலையான வைப்புத்தொகைக்கான (எஃப்டி) வட்டி விகிதத்தை 77 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
“இதன்மூலம், 13 மாத கால டெபாசிட் விகிதம் பொது பிரிவினருக்கு 7.30% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.07% வட்டி விகிதங்களாக உள்ளது.
மேம்படுத்தப்பட்ட விகிதங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்,” என்று பெடரல் வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெடரல் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
ஃபெடரல் வங்கி 7 முதல் 29 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3% வட்டி விகிதத்தையும், 30 முதல் 45 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3.25% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
வங்கி இணையதளத்தின்படி, தற்போது 46 நாள்கள் முதல் 60 நாள்கள் வரை 4.00% வட்டியும், 61 நாள்கள் முதல் 90 நாள்கள் வரை 4.75% வட்டியும் கிடைக்கும்.
தொடர்ந்து, 91 முதல் 119 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.75% என்ற விகிதமும், 120 முதல் 180 நாள்களில் முதிர்ச்சியடைபவைகளுக்கு இப்போது 5% என்ற விகிதத்தில் வட்டியும் கிடைக்கும்.
மேலும், ஃபெடரல் வங்கி இப்போது 1 வருடம் முதல் 15 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 6.80% வட்டி விகிதங்களையும், 15 மாதங்கள் முதல் 2 வருடங்களில் முதிர்ச்சியடைபவர்களுக்கு 7.25% வட்டி விகிதங்களையும் வழங்குகிறது.
அதிகப்பட்ச வட்டி
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முதிர்ச்சியடையும் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான வைப்புகளுக்கு இப்போது 6.75% என்ற விகிதத்தில் வட்டி கிடைக்கும்,
அதே சமயம் மூன்று வருடங்கள் முதல் ஐந்து வருடங்களுக்கும் குறைவானவைகளுக்கு இப்போது 6.60% என்ற விகிதத்தில் வட்டி கிடைக்கும்.
5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதிர்ச்சியடையும் FDகளுக்கு வங்கி 6.60% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த FD வட்டி விகிதங்கள் மே 17, 2023 நிலவரப்படி இருக்கும்.
பெடரல் வங்கியின் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்கள் ரெப்போ விகிதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் தற்போதைய ரெப்போ விகிதம் 6.50% ஆகும்.
அதிகப்பட்சமாக 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
“இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.