Advertisment

எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டிஎஃப்.சி., ஃபிக்ஸட் டெபாசிட்.. எது பெஸ்ட்?

ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து பெஞ்ச்மார்க் ரேட்டை 2.25 சதவீதம் உயர்த்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Fixed Deposit Check latest FD rates December 2022

எஸ்பிஐயை பொறுத்தமட்டில் 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு பொதுப்பிரிவினருக்கு 6.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ரெப்போ வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதை அடுத்து நாட்டின் முக்கிய வங்கிகளும் இதைப் பின்பற்றியுள்ளன.

Advertisment

முன்னதாக, டிசம்பர் 7ஆம் தேதியன்று, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.25 சதவீதமாக உயர்த்தியது, இது மே மாதத்திலிருந்து ஐந்தாவது தொடர்ச்சியான அதிகரிப்பு ஆகும்.

மொத்தத்தில் ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து பெஞ்ச்மார்க் ரேட்டை 2.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக, நிலையான வைப்பு வசதி (SDF) விகிதம் 6 சதவீதமாகவும், விளிம்பு நிலை வசதி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.50 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தொடர்ந்து, SBI vs HDFC vs ICICI ஆகியவையும் தங்கள் FD வட்டி விகிதங்களை பல்வேறு தவணைகளில் உயர்த்தியுள்ளன.

ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்

காலம் பொது வட்டி மூத்த குடிமக்கள் வட்டி
1 ஆண்டு 6.90 % 6.90
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை 6.80 6.80
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 6.50 6.50
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை 6.50 6.50
5 ஆண்டு 80சி ஃபிக்ஸட் டெபாசிட் - -
ஐசிஐசிஐ ஃபிக்ஸட் டெபாசிட் ரேட்

ஹெச்டிஎஃப்சியில் 90 நாள்கள் முதல் 6 மாதங்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்க்கு பொதுப்பிரிவினருக்கு 4.50 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 4.50 சதவீதமும் வழங்கப்படுகிறது.

அதேபோல் ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.10 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.60 சதவீதமும் வழங்கப்படுகிறது.

எஸ்பிஐயை பொறுத்தமட்டில் 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு பொதுப்பிரிவினருக்கு 6.25 சதவீதமும், 6.90 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment