மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதம் 9.5% ஆக அதிகரித்துள்ளது. இரண்டு ஸ்மால் நிதி வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 9.5% அல்லது அதற்கு மேற்பட்ட வட்டி விகிதத்தையும் மற்றவர்களுக்கு 9%க்கும் மேல் வட்டி விகிதத்தையும் வழங்குகின்றன.
அந்த வகையில், சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (SSFB) 5 ஆண்டுகளுக்கு 2 கோடி ரூபாய்க்கும் குறைவான மூத்த குடிமக்கள் வைப்புத்தொகைக்கான FD விகிதத்தை 9.6% ஆக உயர்த்தியது.
தொடர்ந்து, யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 9.5% FD வட்டியையும் மற்றவர்களுக்கு 9% வரையும் ரூ. 2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கு வழங்குகிறது.
பெரிய வங்கிகளில், எஸ்பிஐ 7.6% வரை வட்டி வழங்குகிறது, HDFC வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.75% வரை வட்டி வழங்குகிறது. ஆக்சிஸ் வங்கி 7.95% வரை வட்டி வழங்குகிறது, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி 8.25% வரை வட்டி வழங்குகிறது.
எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
வருங்காலத்தில் ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ விகிதத்தை அதிகரித்தால் வங்கி FD விகிதங்கள் மேலும் உயரக்கூடும். மேலும், FDகள் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன.
இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன், ரிசர்வ் வங்கியின் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) விதிகளின் கீழ் ரூ. 5 லட்சம் வரை மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என்பதையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதாவது, ஒருவேளை ஸ்மால் வங்கி தோல்வியுற்றால், ரூ. 5 லட்சம் வரையிலான உங்கள் டெபாசிட் பாதுகாப்பாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“