Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வட்டி: சீனியர் சிட்டிசன்ஸ் நோட் பண்ணுங்க

மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு சில வங்கிகள் 9 சதவீதத்துக்கும் அதிகமான வட்டியை வழங்குகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fixed deposit rates for senior citizens

பொதுவாக வங்கிகள் ரூ.2 கோடிக்கும் கீழ் ஃபிக்ஸட் டெபாசிட் அதற்கு மேல் உள்ள டெபாசிட்களுக்கு என்று தனித்தனி வட்டியை விதிக்கின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய நிலையில், வங்கிகள், ஸ்மால் வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு நல்ல வட்டியை வழங்குகின்றன.

Advertisment

பொதுவாக வங்கிகள் ரூ.2 கோடிக்கும் கீழ் ஃபிக்ஸட் டெபாசிட் அதற்கு மேல் உள்ள டெபாசிட்களுக்கு என்று தனித்தனி வட்டியை விதிக்கின்றன.

ஆனால் ஸ்மால் வங்கிகளை பொறுத்தமட்டில் ரூ.5 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் மூத்தக் குடிமக்களுக்கு நல்ல ரிட்டன் கொடுக்கும் ஸ்மால் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ்: 181-201 நாள்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு மூத்தக் குடிமக்களுக்கு 9.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் : மூத்தக் குடிமக்களுக்கு 9.11 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

சூர்யாடே ஸ்மால் ஃபைனான்ஸ் : மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ்: மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment