Flipkart open box Delivery: பிளிப்கார்ட்டில் விலை உயர்ந்த பொருட்களை ஆர்டர் பண்றீங்களா? இந்த ஆப்ஷன் மறக்காதீங்க..
If Flipkart turns on this system, the delivery person will think a thousand times before cheating | பிளிப்கார்ட்-ல் இந்த அமைப்பை ஆன் செய்தால், டெலிவரி செய்பவர் ஏமாற்றுவதற்கு முன் ஆயிரம் முறை யோசிப்பார்.
Flipkart Fraud | Safety of your online product | பிளிப்கார்ட் மோசடி | பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் பாதுகாப்பு| இன்றைய டிஜிட்டல் உலகில் அவரவர் நினைத்த நேரத்தில் ஆன்லைன் வழியாக தங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் உதவுகின்றன. இந்தியாவில் இயங்கி வரும் இ-காமர்ஸ் நிறுவனங்களில் பிளிப்கார்ட் மக்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது.
Advertisment
எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள், ஆடை அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பிளிப்கார்ட் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதேநேரம் ஆன்லைன் ஷாப்பிங்கை பயன்படுத்தி பல மோசடி சம்பவங்களும் நடைபெறுகின்றன.
பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்
அப்படி மோசடி நடைபெறுவதை தடுக்க கஸ்டமரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக பிளிப்கார்ட் நிறுவனம், Flipkart Open Box Delivery எனும் அம்சத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது, Flipkart Open Box Delivery ஆப்ஷனை ஆன் செய்தவுடன் டெலிவரி பாய் அல்லது மூன்றாவது நபர் உங்கள் பேக்கேஜை சேதப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் கிட்டத்தட்ட குறைந்து விடும். மேலும் தவறான, தரமில்லாத பொருட்கள் உங்களுக்கு டெலிவரி செய்யப்படுவதும் தடுக்கப்படும். இதன்மூலம் நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகளை தவிர்க்கலாம்.
Image: Filpkart
வழக்கமாக ஆன்லைனில் ஏதாவது பொருட்களை ஆர்டர் செய்யும் கஸ்டமர் ஏற்கெனவே பணம் செலுத்தி இருப்பார் அல்லது கேஷ் ஆன் டெலிவரி மூலம் டெலிவரி ஏஜெண்டிடம் பணத்தைக் கொடுத்து ஆர்டரை வாங்கிக் கொள்வார்கள். பிறகுதான் ஆர்டர் செய்த பாக்ஸில் என்ன இருக்கிறது என்று பார்க்க முடியும். ஒருவேளை நீங்கள் ஆர்டர் செய்த பொருள் உங்களுக்கு பிடிக்கவில்லை அல்லது தவறான பொருளை பெற்றிருக்கிறீர்கள் என்றால் மீண்டும் பிளிப்கார்ட் ஆப்பிற்கு சென்று, ரிடர்ன் அல்லது எக்ஸ்சேஞ் செய்து கொள்ளலாம்.
ஆனால் இந்த Flipkart Open Box Delivery அம்சத்தை பயன்படுத்துவதால், ஆர்டர் டெலிவரி செய்யும் போது, டெலிவரி ஏஜெண்டே, பாக்ஸை திறந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பிறகு கஸ்டமரிடம் பொருளைக் கொடுப்பார். இதில் ஏதாவது தரமில்லாத அல்லது மலிவான அல்லது ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறொரு பிரொடக்ட் இருந்தால், கஸ்டமர் உடனே தங்கள் ஆர்டரை ரிடர்ன் செய்துவிடலாம்.. இதன் மூலம் உங்கள் பணத்தை வீணாக்காமல் சேமிக்க முடியும்.
இந்த Open Box Delivery ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்டுகளின் மொபைல்கள் மற்றும் மடிக்கணினிகள் மற்றும் விலை உயர்ந்த சாதனங்கள் போன்ற அதிக மதிப்புள்ள பொருட்களுக்கு தற்போது பொருந்தும். இதற்காக நீங்கள் கூடுதல் செலவு செய்ய தேவையில்லை. பொருந்தக்கூடிய ஆர்டர்களுக்கு இந்த வசதியை Flipkart இலவசமாக வழங்குகிறது.
அடுத்தமுறை பிளிப்கார்டில் விலை உயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்யும் இந்த Open Box Delivery ஆப்ஷனை கிளிக் செய்ய மறக்காதீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“