scorecardresearch

இன்றும் ஆபர்… கிராமுக்கு ரூ.15 சரிவு: தங்கம் வாங்க சரியான நேரம்!

Gold rates today in Delhi, Chennai, Kolkata, Mumbai – 22 August 2022

இன்றும் ஆபர்… கிராமுக்கு ரூ.15 சரிவு: தங்கம் வாங்க சரியான நேரம்!
சென்னையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் விலை உயர்வுடன் வணிகமான தங்கம் இன்றும் (ஆக.22) விலை வீழ்ச்சியுடன் காணப்புடுகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4,815 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் (8 கிராம்) ரூ.38,520 ஆக உள்ளது. 24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.5,217 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.41,736 ஆக உள்ளது.
இது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.15ம், சவரனுக்கு ரூ.120ம் குறைவாகும். மேலும் ஆகஸ்ட் 13ஆம் தேதி அதிரடி விலை உயர்வுக்கு பின்னர் நிகழ்ந்த சரிவு இதுவாகும்.
அன்றைய தினம் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4,914 எனவும் சவரன் ரூ.39,312 எனவும் காணப்பட்டது. இந்த நிலையில் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 20 காசுகள் குறைந்து உள்ளது.

வெள்ளி விலை
அதன்படி, சென்னையில் கிராம் வெள்ளி ரூ.61.10 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆக.13ஆம் தேதி வெள்ளி ஒரேயடியாக கிராம் ரூ.64.80 காசுகளாக உயர்ந்து கிலோ பார் வெள்ளி ரூ.64,800 ஆக விற்பனையானது.
தற்போது பார் வெள்ளி கிலோ ரூ.61,100 ஆக உள்ளது. ஆக, கடந்த 9 தினங்களில் வெள்ளி கிலோவுக்கு ரூ.3,700 குறைந்துள்ளது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 எனவும் டீசல் லிட்டர் ரூ.94.24 எனவும் விற்பனையாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold rates today 09 august 2022 the gold rate in chennai decreased by rs 15 per gram today