Advertisment

நகை பிரியர்கள் அதிர்ச்சி… மீண்டும் விண்ணை முட்டும் தங்கம் விலை: இன்றைய நிலவரம் பாருங்க!

தங்கம் விலை நேற்றை விட இன்று 2 மடங்கு உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold rates today, 19 July 2023 Chennai in tamil

வாரத்தின் தொடக்க நாளான திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிரடியாக குறைந்தது. ஆனால், நேற்று அப்படியே மீண்டும் சவரனுக்கு ரூ.112 உயர்ந்தது. (சென்னை தங்கம் விலை நிலவரம் 19 ஜூலை 2023)

Gold, Silver Prices Today in Chennai tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால், நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Advertisment

வாரத்தின் தொடக்க நாளான திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிரடியாக குறைந்தது. ஆனால், நேற்று அப்படியே மீண்டும் சவரனுக்கு ரூ.112 உயர்ந்தது. அதனால், 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5,550 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.44,400 ஆகவும் விற்பனையாகியது.

இந்த நிலையில், தங்கம் விலை நேற்றை விட இன்று 2 மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ. 44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.5,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,098 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 48,784 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

தங்கம் போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் உயர்ந்து 82-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 82,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate Business Business Update 2 Tamil Business Update Gold
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment