Advertisment

ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை… நகைப் பிரியர்கள் ஷாக்!

நேற்றுமுன்தினம் ஆடிப்பெருக்கை ஒட்டி தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. நேற்று தங்கம் விலை மாற்றம் இல்லாமல் விற்பனையாகியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold Silver Price Today 23 March 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,060-க்கும், ஒரு சவரன் ரூ. 48,480 -க்கும் விற்பனையாகியது. (சென்னை தங்கம் விலை நிலவரம் 5 ஆகஸ்ட் 2023)

Gold, Silver Rates Today News Updates in tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) ஆடிப்பெருக்கை ஒட்டி தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. இதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,280-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,535-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, நேற்றும் (வெள்ளிக்கிழமை) தங்கம் விலை மாற்றம் இல்லாமல் விற்பனையாகியது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் 5,535 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ. 44,280 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,038-க்கும், ஒரு சவரன் ரூ. 48,304 -க்கும் விற்பனையாகியது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,440க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,555க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,060-க்கும், ஒரு சவரன் ரூ. 48,480 -க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை 30 பைசா உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.78.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Gold Rate Business Gold
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment