/indian-express-tamil/media/media_files/2025/10/28/h-1b-fee-exemption-2025-10-28-14-00-36.jpg)
US announces list of applicants that qualify for H-1B $100K fee exemption
சுனில் தவான் எழுதியது
அமெரிக்காவில் H-1B விசா மூலம் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கான செலவு புதிய விதிகளால் பன்மடங்கு அதிகரித்த நிலையில், சில குறிப்பிட்ட ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1,00,000 அமெரிக்க டாலர் (சுமார் ₹80 லட்சம்) கட்டணம் செலுத்தத் தேவையில்லாத விண்ணப்பதாரர்களின் பட்டியலை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் செப்டம்பர் 21, 2025க்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் அனைத்து H-1B விசா விண்ணப்பங்களுக்கும், 2026-ஆம் ஆண்டுக்கான H-1B லாட்டரிக்கும், அமெரிக்க நிறுவனங்கள் $100K கட்டணத்தைச் செலுத்துவது கட்டாயம் என்று அறிவித்தார்.
இந்தச் சட்டம், வெளிநாட்டுப் பணியாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்திய நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள விலக்குகள் பலருக்கும் நிம்மதி அளித்துள்ளன.
₹80 லட்சம் கட்டணத்தில் இருந்து விலக்கு பெற்றவர்கள் யார்?
H-1B விசா வைத்திருப்பவர்கள் மற்றும் சில F-1 மாணவர்களைப் பணியமர்த்தும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.
1. அமெரிக்காவில் இருக்கும் F-1 மாணவர்கள்:
தற்போது அமெரிக்காவில் F-1 விசாவுடன் இருக்கும் வெளிநாட்டு மாணவர்களை H-1B நிலைக்கு மாற்றும் (Change of Status) அமெரிக்க நிறுவனங்கள் ₹80 லட்சம் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.
ஒ.பி.டி. (Optional Practical Training) திட்டத்தின் கீழ் பணிபுரியும் வெளிநாட்டு மாணவர்களும் 'நிலையை மாற்றுதல்' மூலம் பணியமர்த்தப்படும்போது இந்தக் கட்டண விலக்கைப் பெறத் தகுதி உடையவர்கள்.
- கவனம்: நிலையை மாற்றுவதற்கான விண்ணப்பம் அல்லது புதுப்பித்தல் இறுதி செய்யப்படும் வரை, மாணவரோ அல்லது வெளிநாட்டு ஊழியரோ அமெரிக்காவை விட்டு வெளியேறக் கூடாது.
2. ஏற்கனவே H-1B வைத்திருப்பவர்கள் (Existing H-1B Holders):
ஏற்கனவே வழங்கப்பட்ட எந்த H-1B விசாக்களுக்கும் இந்தப் புதிய கட்டணம் பொருந்தாது.
செப்டம்பர் 21, 2025-க்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட H-1B மனுக்களுக்கும் இந்தப் புதிய கட்டணம் பொருந்தாது.
3. H-1B புதுப்பித்தல் விண்ணப்பங்கள் (Renewals):
ஏற்கனவே H-1B விசா வைத்திருப்பவர்கள் விசா புதுப்பித்தலுக்கு (Renewal) விண்ணப்பிக்கும்போது, நிறுவனங்கள் புதிய ₹80 லட்சம் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. H-1B விசா 6 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
விலக்கு யாருக்குப் பொருந்தாது?
தற்போது அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும், மற்றும் விசா பெறுவதற்காகக் தூதரக அறிவிப்பு (Consular Notification) அல்லது துறைமுக நுழைவு அறிவிப்பு (Port of Entry Notification) தேவைப்படும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்குப் புதிய ₹80 லட்சம் கட்டணம் பொருந்தும்.
தேசிய நலனுக்கான சிறப்பு விலக்கு (Full Exemption)
ஒரு வெளிநாட்டு H-1B தொழிலாளியின் இருப்பு அமெரிக்காவின் தேசிய நலனில் உள்ளது மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்புக்கோ அல்லது நலனுக்கோ அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்றால், அல்லது அமெரிக்கப் பணியாளர்கள் யாரும் கிடைக்கவில்லை என்றால், அரிய சமயங்களில் இந்தச் சிறப்பு விலக்கு கோரப்படலாம்.
- இந்த உயர் வரம்பை (High Threshold) தங்கள் ஊழியர் பூர்த்தி செய்கிறார் என்று நம்பும் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான விலக்குக் கோரி, துணை ஆதாரங்களுடன் டி.எச்.எஸ் அலுவலகத்துக்கு (Department of Homeland Security) கோரிக்கையை அனுப்பலாம்.
இந்தப் புதிய விதித் தளர்வுகள், திறமையான வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தும் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக வந்துள்ளது.
குறிப்பு: பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், தற்போதைய H-1B விசா வைத்திருப்பவர் அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்க எந்தத் தடையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுளளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us