/indian-express-tamil/media/media_files/2025/09/26/microsoft-2025-09-26-14-13-10.jpg)
அமெரிக்கக் கனவை (American Dream) துரத்திக்கொண்டு வரும் சர்வதேச தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் இப்போது ஒரு பெரிய கேள்வி எழுந்துள்ளது: "புதிய விசா கட்டண உயர்வு, எங்கள் வேலைவாய்ப்பைப் பறித்து விடுமா?"
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய பிரகடனத்தின் கீழ், H-1B விசாவுக்கு புதிதாக விண்ணப்பிப்போருக்கான ஒருமுறை கட்டணம், இப்போது $2,000-லிருந்து $5,000-ஆக இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் $100,000-ஆக (சுமார் ரூ. 83 லட்சம்) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் சர்வதேசத் திறமையாளர்களை வேலைக்கு அமர்த்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய விசா கட்டணம்: ஒரு லட்ச ரூபாய் அல்ல, ஒரு லட்சம் டாலர்!
இந்த புதிய $100,000 கட்டணம் முதல் முறையாக H-1B விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள், புதுப்பிப்பவர்கள் அல்லது காலக்கெடுவுக்கு முன் விண்ணப்பித்தவர்கள் இந்த உயர்வுக்கு உட்பட மாட்டார்கள் என்பது ஒரே ஆறுதல். இருப்பினும், அமெரிக்காவில் உள்ள பல இளம் நிபுணர்களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் பணியாளரின் சமூக ஊடகப் பதிவு எழுப்பிய பதற்றம்!
சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ‘சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர் 2 (SDE-2)’ பதவிக்குத் தேர்வான ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஒரு பதிவு, பன்னாட்டுத் தொழில்நுட்ப ஊழியர்கள் மத்தியில் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
“நான் மைக்ரோசாஃப்ட் SDE-2 ஆஃபரைப் பெற்று, பின்னணிச் சரிபார்ப்பையும் முடித்துவிட்டேன். நான் தற்போது F1 STEM OPT-யில் இருக்கிறேன், இன்னும் 20 மாதங்கள் எஞ்சியுள்ளது. அடுத்த ஆண்டு எனக்கு H-1B ஸ்பான்சர்ஷிப் தேவை என்று HR-யிடம் தெரிவித்துள்ளேன். இப்போது இந்த $100K விசா கட்டணத்தால், நிறுவனம் என் ஆஃபரை ரத்து செய்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. வருடத்துக்கு சுமார் $200,000 (சுமார் ரூ. 1.6 கோடி) சம்பளம், நான்கு வருட அனுபவம் இருந்தும், "இந்த புதிய விதியால் நிறுவனங்கள் ஆஃபர்களை ரத்து செய்ததாக யாராவது கேள்விப்பட்டீர்களா?" என்று அவர் உதவி கோரியுள்ளார்.
வலைத்தள பயனர்களின் கருத்துக்கள்: "இந்த சிஸ்டமே உடைந்துவிட்டது!"
இந்தப் பதிவுக்குப் பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்:
ஒரு பயனர், “H-1B விசா, அமெரிக்காவில் இல்லாத திறமையைக் கொண்டு வர வடிவமைக்கப்பட்டது. ஆனால், இப்போது SDE-2 போன்ற வேலைக்கு எளிதில் அமர்த்தக்கூடிய வேலையற்ற அமெரிக்கர்கள் பலர் இருக்கிறார்கள். இந்தச் சிஸ்டமே முற்றிலும் உடைந்துவிட்டது என்பதற்கு இது ஒரு கிளாசிக் எடுத்துக்காட்டு,” என்று கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், “ஏன் நீங்கள் மைக்ரோசாஃப்ட் இந்தியாவில் பணியாற்றக் கூடாது?” என்று கேட்டுள்ளார்.
இன்னொருவர், “நீங்கள் விசா தேவையில்லை என்று ரிக்ரூட்டரிடம் சொல்லிவிட்டு, இந்தியாவில் பணியாற்றத் திட்டமிடுகிறீர்கள் என்றால் என்னாகும் என்று கேளுங்கள்,” என்று மாற்று யோசனையைத் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நெருக்கடி?
திறமையான சர்வதேச ஊழியர்களை நம்பியிருக்கும் தொழில்நுட்பத் துறைக்கு இந்த கட்டண உயர்வு பெரிய நிதிச்சுமையைக் கொடுக்கும். ஒரு புதிய ஊழியருக்காக ஒரு லட்சம் டாலர் செலவு செய்ய வேண்டுமா அல்லது அதே திறமையில் அமெரிக்க ஊழியரை அமர்த்த வேண்டுமா என்று நிறுவனங்கள் யோசிக்க நேரிடலாம். இதனால், சர்வதேச நிபுணர்களின் அமெரிக்கக் கனவு நனவாகுமா என்பது நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கக் கனவு: கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லையா?
விசா கட்டண உயர்வால், பல சர்வதேச நிபுணர்கள், "அமெரிக்காவில் தங்குவதன் உணர்ச்சிப்பூர்வமான விலை என்ன? நாங்கள் அமெரிக்காவை விட்டுவிட வேண்டுமா?" என்று மனதளவில் தவித்து வருகின்றனர்.
(சமூக ஊடகத்தில் ஒரு பயனரால் பகிரப்பட்ட தகவலின் அடிப்படையில் இக்கட்டுரை அமைந்துள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் கருத்துக்கள் அசல் பதிவரை மட்டுமே சார்ந்தது. Financialexpress.com இதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கவில்லை.)
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
************
இந்தியர்கள் ஜெர்மனியில் வேலை தேடுவது இப்போது பெருகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், ஜெர்மனியின் வலுவான பொருளாதாரமும், அங்குள்ள உறுதியான வேலைவாய்ப்பு கொள்கைகளும் தான். ஜெர்மனியில் பணிபுரியும் இந்தியர்கள், ஜெர்மானியர்களை விடவும் அதிக சம்பளம் பெறுகிறார்கள் என்று ஜெர்மனிக்கான தூதர் ஃபிலிப் அக்கர்மேன் தெரிவித்திருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெர்மனியில் பணிபுரியும் சராசரி இந்தியரின் வருமானம், ஜெர்மனியில் பணிபுரியும் சராசரி ஜெர்மானியரின் வருமானத்தை விட அதிகமாக உள்ளது. இது மிகவும் நல்ல செய்தி. இந்த அதிக சம்பளம், இந்திய நிபுணர்கள் ஜெர்மனியின் வளர்ச்சிக்கு எவ்வளவு பெரிய அளவில் பங்களிக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது” என்று அவர் கூறினார்.
இதைப்பற்றி மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
'H1B விசா கவலையை விடுங்க... திறமை இருந்தா இங்க வாங்க': இந்தியர்களுக்கு ஜெர்மனி சிவப்புக் கம்பளம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.