ரூ. 83 லட்சம் எச்-1பி விசா கட்டணம்: அமேசான், மைக்ரோசாஃப்ட் விட டிசிஎஸ்-ஸை அதிகம் வதைப்பது ஏன்?

ஆனால், இந்தக் கட்டணம் இந்திய நிறுவனங்களான டிசிஎஸ் (TCS), இன்ஃபோசிஸ் போன்றவற்றை மட்டும் ஏன் மிக அதிகமாகப் பாதிக்கிறது? அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற அமெரிக்க ஜாம்பவான்கள் ஏன் சத்தமில்லாமல் இருக்கிறார்கள்? இதற்கான விடை சம்பள விவரங்களில் ஒளிந்துள்ளது!

ஆனால், இந்தக் கட்டணம் இந்திய நிறுவனங்களான டிசிஎஸ் (TCS), இன்ஃபோசிஸ் போன்றவற்றை மட்டும் ஏன் மிக அதிகமாகப் பாதிக்கிறது? அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற அமெரிக்க ஜாம்பவான்கள் ஏன் சத்தமில்லாமல் இருக்கிறார்கள்? இதற்கான விடை சம்பள விவரங்களில் ஒளிந்துள்ளது!

author-image
abhisudha
New Update
H 1B Visa Fee

Why Trump’s $100,000 H-1B fee hurts TCS more than Amazon

அசாத் டொஸ்ஸானி எழுதியது

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செப்டம்பர் 19, 2025 அன்று வெளியிட்ட புதிய கொள்கை அறிவிப்பு, இந்தியத் தொழில்நுட்பத் துறைக்குப் பெரும் அடியாக விழுந்துள்ளது. புதிதாக விண்ணப்பிக்கப்படும் அனைத்து எச்-1பி விசாக்களுக்கும் $1,00,000 (சுமார் ₹83 லட்சம்) கட்டணம் விதிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Advertisment

கடந்த ஆண்டு எச்-1பி விசா பெற்றவர்களில் 71% இந்தியர்கள் என்பதால், இந்த அறிவிப்பு இந்திய நிறுவனங்களான டிசிஎஸ் (TCS) மற்றும் இன்ஃபோசிஸ் போன்றவற்றை மட்டும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது.

பங்குச்சந்தையில் ஆட்டம் கண்ட இந்திய நிறுவனங்கள்!

இந்தக் கட்டண அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குள் அதன் தாக்கம் பங்குச் சந்தைகளில் உடனடியாக எதிரொலித்தது.h1b 1

அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களை விட இந்திய நிறுவனங்களின் பங்குகள் மிக அதிகமாகச் சரிந்ததற்கு முக்கியக் காரணம், இரு தரப்பினருக்கும் உள்ள சம்பளத்தில் உள்ள மிகப்பெரிய வேறுபாடே ஆகும்.

Advertisment
Advertisements

சம்பளப் பிளவே மூலக் காரணம்!

எச்-1பி விசா ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அளிக்கும் சராசரி ஆண்டுச் சம்பள விவரங்களைப் பார்க்கும்போது, இந்திய நிறுவனங்கள் ஏன் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது.

  • டிசிஎஸ் ஊழியர்களின் சராசரி சம்பளம்: $78,000
  • இன்ஃபோசிஸ் ஊழியர்களின் சராசரி சம்பளம்: $71,000

ஆனால்,

  • அமேசான் ஊழியர்களின் சராசரி சம்பளம்: $1,43,000
  • மைக்ரோசாஃப்ட் ஊழியர்களின் சராசரி சம்பளம்: $1,41,000

இந்திய நிறுவனங்களைப் பொறுத்தவரை, இந்த $1,00,000 விசா கட்டணம் என்பது ஊழியர்களுக்கு வழங்கப்படும் சராசரி ஆண்டுச் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்! இதனால், இந்திய நிறுவனங்களின் லாபப் பகுதி (Bottom Line) மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் பங்கு விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அமைதியாக இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள்!

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடாமல் அமைதியாக இருப்பதற்குக் காரணம் என்னவென்றால், இந்த விதிமுறை காரணமாக இந்திய நிறுவனங்கள் விசாவுக்கு விண்ணப்பிப்பதைக் குறைக்கும். இதனால், குலுக்கல் முறையில் விசா பெறும் வாய்ப்பு அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற அதிகச் சம்பளம் வழங்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிகரிக்கும்!

ஒரு நேர்மறைப் பார்வை: 

இந்தக் கட்டண உயர்வால் இந்தியாவிற்கு ஒரு நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டு ஊழியர்களுக்கான செலவு அதிகரிப்பதால், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் (TCS, Infosys) போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள திறமையான பணியாளர்களை அதிக அளவில் உள்நாட்டில் பணியமர்த்த வாய்ப்புள்ளது.

இதனால், உள்நாட்டு வேலைவாய்ப்பு அதிகரித்து, பொருளாதாரம் ஒரு மாற்றுப் பாதையில் செல்லக்கூடும். நிறுவனங்கள் தங்கள் வணிக மாதிரிகளை வெற்றிகரமாக மாற்றியமைத்தால், அவற்றின் பங்கு விலைகள் நிச்சயம் மீண்டு வரக்கூடும். எனவே, தற்போதைய பங்குச் சந்தை சரிவு ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாகவும் அமையலாம்.

இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்பு!

இந்த விசா மாற்றத்தின் விளைவாக, டெக் துறை தாண்டி இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • இந்த அறிவிப்புக்குப் பிறகு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 0.6% சரிந்துள்ளது.
    • நிஃப்டி குறியீடு 2.7% வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்கக் கொள்கைகளின் தாக்கத்தால், ரூபாய் தற்போது சாதனை அளவிலான குறைந்த மதிப்பில் உள்ளது. அதேசமயம், தங்கம் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு, அவுன்ஸ் ஒன்றுக்கு $4,000-ஐ தாண்டியுள்ளது.

பொறுப்புத் துறப்பு (Disclaimer):

இந்தக் கட்டுரையின் நோக்கம், சுவாரஸ்யமான தரவுகளையும், சிந்தனையைத் தூண்டும் கருத்துகளையும் பகிர்வது மட்டுமே. இது முதலீட்டுப் பரிந்துரை அல்ல. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த செய்தியை ஆங்கில மொழியில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

H1b Visa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: