F-1 விசா, அமெரிக்க குடியுரிமை... வெளிநாட்டு மாணவர்கள் பெறுவதில் நீடிக்கும் தடைகள்

இதன் நேரடித் தாக்கம் என்னவென்றால், நிறுவனங்கள் நிச்சயமாக உலகிலேயே மிகச் சிறந்த மற்றும் அதிக சம்பளம் பெறும் திறமையாளர்களை மட்டுமே பணியமர்த்த விரும்பும்.

இதன் நேரடித் தாக்கம் என்னவென்றால், நிறுவனங்கள் நிச்சயமாக உலகிலேயே மிகச் சிறந்த மற்றும் அதிக சம்பளம் பெறும் திறமையாளர்களை மட்டுமே பணியமர்த்த விரும்பும்.

author-image
abhisudha
New Update
International students USA

Foreign students face roadblocks on path from F-1 visa to US citizenship

அமெரிக்காவில் உயர்கல்வி பெற்று, எச்-1பி (H-1B) விசா மூலம் பணிக்குச் சேர்ந்து, இறுதியாக கிரீன் கார்டு பெற்று அமெரிக்கக் குடிமகனாக மாறுவது, உலகெங்கிலும் உள்ள, குறிப்பாக இந்திய மாணவர்களின் மிகப் பெரிய கனவு. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் வெளியிட்ட ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பால், கோடிக்கணக்கான மாணவர்களின் அந்தக் கனவு இப்போது திசைமாறி, தவிப்புக்கு உள்ளாகியுள்ளது.

Advertisment

ஒரு லட்ச ரூபாய் இல்லை, $1,00,000 கட்டணம்!

வெளிநாட்டு ஊழியர்களுக்காக எச்-1பி விசா விண்ணப்பம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள், இனிமேல் $100,000 டாலர் (சுமார் ₹ 83 லட்சம்) கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார். 2027-ஆம் நிதியாண்டிற்கான (FY 2027) எச்-1பி விசா சீசனில் இந்தக் கட்டணம் முதல் முறையாக வசூலிக்கப்படும். இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கான செலவை மிக அதிகமாக உயர்த்தியுள்ளது.

இதன் நேரடித் தாக்கம் என்னவென்றால், நிறுவனங்கள் நிச்சயமாக உலகிலேயே மிகச் சிறந்த மற்றும் அதிக சம்பளம் பெறும் திறமையாளர்களை மட்டுமே பணியமர்த்த விரும்பும். குறைவான ஊதியம் அல்லது குறைந்த திறன் கொண்ட பணிகளுக்கு வெளிநாட்டவரைப் பணியமர்த்துவது என்பது இனி சாத்தியமில்லை.

படிப்பு முதல் குடியுரிமை வரை

வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் முதுநிலை அல்லது இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, ஓ.பி.டி. (Optional Practical Training) திட்டம் மூலம் பணி அனுபவம் பெறுவார்கள். அதன்பிறகு, ஒரு அமெரிக்க நிறுவனம் பணியமர்த்த முன்வந்தால், அவர்கள் எச்-1பி விசாவுக்கு விண்ணப்பிப்பார்கள். இதுவே, கிரீன் கார்டுக்கான நுழைவுப் பாலம்.

Advertisment
Advertisements

இப்போது, எச்-1பி விசாவுக்கு நிறுவனங்கள் $1,00,000 கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், இந்தப் பாலமே உடைக்கப்படுகிறது. அமெரிக்கக் கல்வியில் செய்யப்படும் முதலீட்டுக்கு (ROI) இப்போது சரியான லாபம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சராசரியாக எச்-1பி விசா பெறுபவர்களின் ஆண்டுச் சம்பளமே $120,000 இருக்கும் நிலையில், விசாவுக்காக மட்டுமே $1,00,000 செலுத்த நேரிட்டால், வெளிநாட்டுப் பணியமர்த்தலை நிறுவனங்கள் முற்றிலும் நிறுத்தக்கூடும். "கனவுகளைத் துரத்தி அதிகக் கடன் வாங்கும் மாணவர்களுக்கு, இந்த முடிவு நியாயமானதாக இல்லை," என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நிபுணர்களின் ஆலோசனை: 'பிளான் பி' அவசியம்

சர்வதேச மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் அமெரிக்கக் கனவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது.

GradRight நிறுவனத்தின் இணை நிறுவனர் அமன் சிங் கூறுகையில், "இந்தக் கொள்கை மாணவர்களை நேரடியாகப் பாதிக்காமல், நிறுவனங்களை இலக்காகக் கொண்டிருக்கிறது. அதிகச் செலவு காரணமாக நிறுவனங்கள், திறமையான பட்டதாரிகளை மட்டும் தேர்ந்தெடுக்கும்" என்றார்.

GyanDhan நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அன்கித் மெஹ்ரா, "அமெரிக்காவில் வேலை செய்வதுதான் உங்கள் படிப்புத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றால், ஸ்பிரிங் 2026 (Spring 2026) செமஸ்டரை ஒத்திவைப்பது குறித்து சிந்தியுங்கள். நீதிமன்றத் தலையீட்டுக்குப் பின்னரே இந்தக் கொள்கையில் தெளிவு பிறக்கலாம். ஃபால் 2026 செமஸ்டர் (Fall 2026) விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்தைத் தொடரலாம், ஆனால் பிற நாடுகளில் 'பிளான் பி' ஒன்றை உறுதியாக உருவாக்கிக் கொள்ளுங்கள்" என்றார். 

Prodigal நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாந்தனு கங்கல், ஹெச்-1பி விசாவுக்கு ஆகும் $100,000 கட்டணத்தால், அமெரிக்காவில் MBA அல்லது Master’s படிப்பில் முதலீடு செய்வதற்கான வருமானம் (Return on Investment) குறைந்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் ஹெச்-1பி விசா வைத்திருப்போரில் 70%க்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்பதால், இந்த திடீர் கட்டண உயர்வு ஆயிரக்கணக்கான இந்தியத் திறமையாளர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக அச்சுறுத்துகிறது. மேலும், இது இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உலகளாவிய செயல்பாடுகளையும் பாதிக்கிறது.

"டிரம்ப் பதவிக்காலம் இன்னும் 40 மாதங்கள் உள்ளது. இன்னும் பல கடுமையான நடவடிக்கைகள் வரக்கூடும். மாய உலகக் கனவுகளுக்காகத் தங்களின் வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம்," என நிதி ஆலோசகர் கோவிந்தா எச்சரித்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தின் சமீபத்திய பல கடுமையான நடவடிக்கைகளை (F-1 விசா இரத்து, OPT விதிகள் மாற்றம்) சேர்த்துப் பார்க்கும்போது, சர்வதேச மாணவர்கள் இப்போது அமெரிக்காவில் வரவேற்கப்படுவதில்லை என்ற செய்தி தெளிவாகிறது. இனி, மாணவர்கள் தங்கள் திறன்களை மதிப்பிட்டு, அமெரிக்காவிற்கு மாற்றாக பிற நாடுகளைத் தேர்ந்தெடுப்பது குறித்து திட்டமிட வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

H1b Visa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: