Advertisment

ஹெச்.டி.எஃப்.சி சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்: மூத்தக் குடிமக்களுக்கு கூடுதல் வட்டி: இதை தவற விட்டுராதீங்க!

2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரையில், வங்கி 7.70% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
HDFC Banks special FD for senior citizens with higher interest rate will end soon

ஹெச்.டி.எஃப்.சி வங்கி மூத்தக் குடிமக்களுக்கு சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை மே 18, 2020ல் அறிமுகப்படுத்தியது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி மூத்தக் குடிமக்களுக்கு சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை மே 18, 2020ல் அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டம் 2023 ஜூலை 7ஆம் தேதியுடன் முடிவடைகிறது என வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தத் திட்டம் நீட்டிப்பு செய்யப்படலாம் அல்லது இன்றுடன் நிறைவுபெறலாம். இத்திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்கு கூடுதலாக 0.75 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

இந்தப் ஃபிக்ஸட் டெபாசிட்டின் காலம் 5 ஆண்டுகள் ஒரு நாள் முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும்.

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி

வங்கி இப்போது மூத்த குடிமக்களுக்கு 7 முதல் 29 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3.50% வட்டி விகிதத்தையும், 30 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

ஹெச்டிஎஃப்சி வங்கி 46 முதல் 6 மாதங்களுக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு 5% வட்டி விகிதங்களையும், 6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்களுக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு 6.25% வட்டி விகிதத்தையும் வழங்கும்.

9 மாதங்கள், 1 நாள் முதல் 1 வருடம் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு, வங்கி 6.50% என்ற விகிதத்தில் வட்டி செலுத்தும், அதே நேரத்தில் HDFC வங்கி 1 வருடம் முதல் 15 மாதங்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.10% என்ற விகிதத்தில் வட்டியை வழங்கும்.

HDFC வங்கி 15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.60% மற்றும் 18 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.50% வட்டி விகிதத்தை செலுத்தும். 2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரையில், வங்கி 7.70% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment