Advertisment

Hdfc கிரேடிட் கார்டு இருக்கா? வட்டி கட்ட தயாராகுங்கள்!

நிலுவைத் தொகையை வைத்துள்ள வாடிக்கையாளர்கரிடம் தாமதமாக செலுத்தியதற்காக ரூ.950 கட்டணம் வசூலித்தது.

author-image
sreeja
புதுப்பிக்கப்பட்டது
New Update
hdfc hdfc bank deposit hdfc deposit

hdfc hdfc bank deposit hdfc deposit

Hdfc credit card hdfc bank credit card hdfc :வங்கி கணக்கு இருப்பை தெரிந்துக் கொள்வது, உங்கள் கடன் அட்டையில் கிடைக்கக்கூடிய கடன் வரம்பை தெரிந்துக் கொள்வது அல்லது ஒரு வங்கி கிளையின் IFSC code ஐ கண்டுபிடிப்பது போன்றவை உட்பட இன்னும் பல வங்கி சேவைகளை எச்டிஎப்சி வங்கியின் வாட்ஸ் ஆப் வங்கி சேவை வழங்குகிறது.

Advertisment

வாட்ஸ் ஆப் வங்கி சேவையின் நன்மை என்பது, அடிப்படை வங்கி சேவைகள் 24 மணி நேரமும் வங்கி விடுமுறை நாட்களிலும் கூட கிடைக்க வழி செய்வதாகும். இதற்காக வங்கி எந்த கட்டணத்தையும் தனியாக வசூலிப்பதில்லை.

அதே போல்,எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டுகளுக்கான தாமதக் கட்டணக் கட்டணத்தை உயர்த்தியது மட்டுமின்றி சில கிரெடிட் கார்டுகளின் வட்டி விகிதத்தையும் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எச்.டி.எஃப்.சி வங்கியின் கிரெடிட் கார்டுகான தாமதமாக செலுத்தும் கட்டணம் மற்றும் வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது என்று 'ப்ளூம்பெர்க்' தெரிவித்துள்ளது எச்.டி.எஃப்.சி வங்கியின் இணையதளத்தில் இருக்கும் கட்டணங்கள் குறித்த அறிக்கையின்படி, ஆகஸ்ட் 31 வரை ரூ.25,000 மற்றும் அதற்கு மேல் நிலுவைத் தொகையை வைத்துள்ள வாடிக்கையாளர்கரிடம் தாமதமாக செலுத்தியதற்காக ரூ.950 கட்டணம் வசூலித்தது.

இருப்பினும் செப்டம்பர் 1 முதல் கிரெடிட் கார்டில் ரூ.25,000 முதல் 50,000 வரை இருப்பு வைத்திருந்தவர்கள் தாமத கட்டணமாக ரூ.1,100ம், ரூ .50,000க்கு மேல் இருப்பு வைத்திருந்தவர்கள் ரூ.1,300ம் கட்டணமாக செலுத்துவார்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

சில கிரெடிட் கார்டுகளில் 'ரிவால்வர் பேலன்ஸ்' மீதான வட்டி விகிதத்தை வங்கி மாதத்திற்கு 3.49 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது என்றும் 'ப்ளூம்பெர்க்' தெரிவித்துள்ளது. இந்த தகவல் குறித்து வங்கி சார்பில் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Hdfc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment