/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-17.jpg)
எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் டாடா கேப்பிட்டல் ஆகியவற்றில் பெர்சனல் லோன் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
Loan Scheme | Hdfc | Sbi Bank | இன்றைய சூழலில் பெர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன்கள் மிக எளிதாக கிடைக்கின்றன. பல்வேறு வங்கிகள் இன்ஸ்டா பெர்சனல் லோன்கள் வழங்குகின்றன.
இந்த தனிநபர் கடன்களில், மெட்ரோ, நகரம், கிராமம் வங்கிகளை பொறுத்து வட்டி விகிதங்கள் மாறுபடும். மேலும் கடன் தொகையை பொறுத்தும் வட்டி விகிதங்கள் மாறுபடுகின்றன.
அந்த வகையில் எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் டாடா உள்ளிட்ட வங்கிகளின் பெர்சனல் லோன் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
1) டாடா கேப்பிட்டல்
டாடா கேப்பிட்டல் நிறுவனத்தில் ஆண்டுக்கு 10.99 சதவீதம் வட்டி விதிக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் கடனுக்கான இஎம்ஐ ரூ.10,869 முதல், ரூ.1 லட்சத்துக்கு ரூ.2,174ல் இருந்து தொடங்குகிறது. செயலாக்கக் கட்டணம் கடன் தொகையில் 5.5% வரை இருக்கலாம்.
2) ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
பாரத ஸ்டேட் வங்கி ஆண்டுக்கு 11.15% முதல் 15.30% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. ரூ.5 லட்சம் கடனுக்கான இஎம்ஐ ரூ.10,909 முதல் ரூ.11,974 வரையிலும், ரூ.1 லட்சத்துக்கு ரூ.2,182 முதல் ரூ.2,395 வரையிலும் இருக்கும். செயலாக்க கட்டணம் 1.5% வரை மாறுபடும், குறைந்தபட்சம் ரூ 1,000 மற்றும் அதிகபட்சம் ரூ 15,000 ஆகும்.
3) ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கு, வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.50% முதல் தொடங்குகிறது. 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கடன் தொகைக்கு, இஎம்ஐ ரூ.10,747ல் இருந்து தொடங்குகிறது. மேலும் ரூ.1 லட்சத்திற்கு ரூ.2,149 முதல் தொடங்குகிறது. செயலாக்க கட்டணம் ரூ.4,999 வரை விதிக்கப்படலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.