இளம் வயதிலேயே சுகாதாரக் காப்பீடு முக்கியம் ஏன்?

Health Insurance importance: நீங்கள் வேலை செய்யுங்கள் அதே நேரத்தில் மன அமைதியைப் பெற ஒரு சுகாதார காப்பீட்டு அட்டையையும் வாங்கவும்!

Health Insurance news in tamil: தொலைக்காட்சிகளிலும், டிஜிட்டல் தளங்களிலும் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை அதிகமாகப் பார்ப்பது அல்லது ஜிம்மிற்குச் சென்று உடல் ஃபிட்டாக இருப்பதற்கு வேண்டிய அனைத்தையும் செய்வது – இதுதான் பெரும்பாலான இளைஞர்கள் பின்பற்றும் வாழ்க்கை மந்திரமாக உள்ளது. இது அவர்கள் பொழுதுபோக்குவதற்கும் அப்டேட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கும் ஒரு நல்ல அணுகுமுறை. ஆனால், அது போதாது. வாழ்க்கையின் அபாயங்களைப் பற்றி அறிந்திருப்பது அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். குறிப்பாக பணம் தொடர்பான விஷயங்களில்.

எனவே, அதிகரித்து வரும் மருத்துவமனை செலவுகளுக்கு மிகவும் சரியான தீர்வாக சுகாதார காப்பீட்டு திட்டத்தை வாங்கி மன அமைதியை உறுதி செய்யுங்கள். சுகாதார காப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதியை (காப்பீட்டுத் தொகை என அழைக்கப்படுகிறது) பிரீமியமாக செலுத்துவதன் மூலம், காப்பீட்டாளர் பாலிசிதாரரின் சார்பாக மருத்துவமனை கட்டணங்களை செலுத்துவதை உறுதி செய்கிறார்.

ஆனால், ஒரு பொதுவான கருத்து என்னவென்றால் – “நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன், எனவே, நான் ஏன் சுகாதார காப்பீட்டு திட்டத்தை வாங்க வேண்டும்?” வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே சுகாதார காப்பீட்டு திட்டத்தை பெறுவதன் முக்கியத்துவத்தை இளைஞர்கள் ஏன் உணர வேண்டும் என்பதைப் கவனிப்போம்.

ஒருவர் உடல் வலிமையுடனும் உடல் உறுப்புகள் நல்ல நிலையில் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கும்போது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை பெறுவதற்கு சரியான நேரம் என்பது உறுதிசெய்யப்பட்ட உண்மை. நீங்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால், பிரீமியம் குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், காப்பீடு கோருவதற்கான காலமும் குறைவாக இருக்கும். இது உங்களுக்கு உதவும் வகையில் அமைந்த மாறுபட்ட ஒரு நல்ல வாய்பாகும்.

எந்த ஆண்டும் காப்பீட்டு கோரிக்கை இல்லை என்றாலும், ஒருவர் காப்பீட்டு கோரிக்கை இல்லாததற்கான போனஸின் (என்.சி.பி) நன்மையைப் பெறுகிறார். பாலிசிதாரராக, ஒவ்வொரு கோரிக்கை இல்லாத ஆண்டிற்கும், ஒருவர் கூடுதல் செலவில் கூடுதல் பாதுகாப்பு பெறுகிறார்! காலப்போக்கில், கவரேஜ் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல், காப்பீட்டாளருடன் தொடர்ந்து பாலிசியை இயக்குவதற்கான நன்மை ஆகும்.

இளம் வயதிலேயே சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை பெறுவதன் மிகப்பெரிய நன்மை, முன்பு இருந்த எந்தவொரு வியாதிகளுடன் காத்திருக்கும் காலங்களை கவனித்துக்கொள்வதாகும். ஆனால், காத்திருக்கும் காலம் என்பது என்ன? சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில், பாலிசிதாரரின் குறிப்பிட்ட சில அல்லது ஏற்கனவே உள்ள அனைத்து நோய்களும் அடங்கிய முன் சில குறிப்பிட்ட காத்திருப்பு காலங்கள் உள்ளன. சில நோய்கள் 12 அல்லது 24 மாதங்களுக்குப் பிறகு காப்பீட்டு பாதுகாப்பில் வரும். முன்பே இருக்கும் நோய்கள் பெரும்பாலும் 48 மாதங்களுக்குப் பிறகு காப்பீட்டு பாதுகாப்பில் வரும். முன்னதாக ஒரு பாலிசியை பெறுவதன் நன்மை என்னவென்றால், முன்பே இருக்கும் வியாதிகள் தானாகவே ஒருவரின் எல்லா காலங்களிலும் பொருந்தும்.

விபத்துக் காப்பீடு

பொதுவாக விபத்துக்கள் தற்செயலாக நடப்பவை. யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம். வயது வித்தியாசமில்லாமல் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்து மருத்துவமனையில் சேரலாம். அதனால், பாலிசி பெற்ற முதல் நாளிலிருந்து விபத்துகள் ஏற்பட்டால், சுகாதார காப்பீட்டுத் திட்டம் மருத்துவமனை செலவுகளைச் சேமிக்க உதவுகிறது.

வரி சலுகை

நீங்கள் இளமையானவராகவும் சம்பாதிப்பவராகவும் இருந்தால், சுகாதார காப்பீட்டுத் திட்டத்தைப் பெறுவதில் ஒரு நன்மை இருக்கிறது. சுகாதார காப்பீட்டிற்கு செலுத்தப்படும் பிரீமியம் வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் ரூ.25,000 வரை வரி சலுகைகள் உண்டு. மேலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சார்ந்து இருந்தால், பெற்றோரின் பெயரில் வாங்கப்பட்ட சுகாதார காப்பீட்டுத் திட்டத்திற்கு செலுத்தப்படும் பிரீமியத்திற்கு வரி சலுகை ரூ.50,000 வரை உள்ளது. பல ஊழியர்கள் தங்கள் முதலாளியால் வழங்கப்பட்ட குழு சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ளனர். ஆனால், நினைவில் கொள்ளுங்கள், அவை வேலையில் இருக்கும்போது மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். அதற்குப்பிறகு இல்லை.

வாழ்க்கையின் இலக்குகளை கண்டறியுங்கள்

இளம் வயதில் சுகாதார காப்பீட்டு திட்டத்தை பெறுவதில் மற்றுமொரு முக்கிய நன்மைகளில் ஒன்று, ஒருவரின் நிதி இலக்குகள் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதாகும். சுகாதார காப்பீட்டு திட்டம் இல்லாத நிலையில், மருத்துவமனையில் சேர்க்கும் செலவை ஈடுசெய்ய ஒருவர் ஏற்கனவே உள்ள முதலீடுகளை மீட்டெடுக்க வேண்டும். ஆகவே, பெரும்பாலான நிதி திட்டமிடுபவர்கள், நீண்டகால இலக்குகளைச் சேமிக்கத் தொடங்குவதற்கு முன்பே சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை வாங்க பரிந்துரைக்கின்றனர்.

கடைசியாக

முக்கியமாக, ஒரு சுகாதார காப்பீட்டுத் திட்டம் அவருக்கு மட்டுமல்ல, முழு குடும்பத்திற்கும் பொருந்தும். நீங்கள் இளமையானவராக திருமணமானவராக இருந்தால், குடும்ப சுகாதார காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. சுகாதார காப்பீட்டைப் பெறுவது என்பது இளம் வயதிலேயே நிச்சயமற்ற சுகாதார அபாயங்களுக்கு எதிராக தயாராகுவதற்கு நீங்கள் எடுக்கும் முதல் முயற்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் வேலை செய்யுங்கள் அதே நேரத்தில் மன அமைதியைப் பெற ஒரு சுகாதார காப்பீட்டு அட்டையையும் வாங்கவும்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Health insurance news in tamil why is health insurance important even at a young age

Next Story
லாபமும் உண்டு….கூடுதல் வட்டியும் உண்டு! Hdfc பேங்கில் அப்படி என்ன ஸ்கீம்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com