Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வட்டி: இந்த ஸ்மால் வங்கிகளை பாருங்க!

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு ஸ்மால் வங்கிகள் 9 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Know the LIC Kanyadan Policy

எஃப்டி முதலீட்டு திட்டங்களுக்கு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் 9 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.

இன்றைய காலகட்டத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்கள் சிறப்பு முதலீட்டு வாய்ப்பாக கருதப்படுகின்றன. பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு வாய்ப்புகள் அஞ்சலகங்கள், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வழங்குகின்றன.

Advertisment

இதுமட்டுமின்றி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு நல்ல வட்டி வழங்குகின்றன. வங்கிகளை போல் அஞ்சலகங்களும் மூத்தக் குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு கூடுதல் வட்டி வழங்குகின்றன.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ விகித்ததை உயர்த்தவில்லை. இதனால் வங்கிகள் தாராளமாக ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி வழங்குகின்றன.

அந்த வகையில், உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, இஎஸ்ஏஎஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 9 சதவீதத்துக்கு மேல் வட்டி வழங்குகின்றன.

இதில் சில ஸ்மால் வங்கிகள் மூத்தக் குடிமக்கள் எஃப்டிகளுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி வழங்குகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment