Advertisment

மாதம் ரூ.12 ஆயிரம் ஓய்வூதியம்: எல்.ஐ.சி.யின் இந்தப் பாலிசி தெரியுமா?

மாதம் ரூ.12 ஆயிரம் ஓய்வூதியம் அளிக்கும் இந்தப் பாலிசி குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How to apply for Saral Pension Yojana

எல்ஐசி சரல் பென்ஷன் திட்டம் ஒருமுறை பிரிமீயம் செலுத்தும் திட்டம் ஆகும்.

மக்களின் காப்பீடு மற்றும் முதலீட்டை கவனத்தில் கொண்டு எல்.ஐ.சி. பல்வேறு விதமான திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

Advertisment

அந்த வகையில் அரசு ஊழியர்களை போல் தனியார் துறை ஊழியர்களும் ஒய்வூதியம் பெறும் வகையிலும் பிரத்யேக திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும், எல்ஐசி அனைத்து பிரிவினருக்கும் பாலிசி திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டங்களின் உதவியுடன், உங்கள் எதிர்காலத்திற்கான வருமானத்தை நீங்கள் ஏற்பாடு செய்யலாம்.

எல்.ஐ.சி. சரல் பென்ஷன் திட்டம்

எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 12,000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம்.

இதற்கு நீங்கள் ஒரு முறை மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும், அதன் பிறகு 60 வயதில் ஓய்வூதியமாக ரூ.12,000 கிடைக்கும். இந்த ஓய்வூதியத்தின் பலனை உங்கள் வாழ்நாள் முழுவதும் பெறுவீர்கள்.

60 வயதில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.58,950 பென்ஷன் கிடைக்கும். இது ஓய்வூதிய முதலீட்டுக் கணக்கைப் பொறுத்தது.

விண்ணப்பிப்பது எப்படி?

நீங்கள் இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறைகள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.12,000 முதலீடு செய்ய வேண்டும். இதில் அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை.

இந்த திட்டம் 40 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்களுக்கானது. பாலிசிதாரர் இந்த பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் பாலிசியில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lic Lic Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment