lic-policy | எல்ஐசி நியூ சில்ரன்ஸ் (புதிய குழந்தைகள்) பணம் திரும்பப் பெறும் திட்டம் என்பது குழந்தைகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுக் திட்டம் ஆகும்.
இந்தத் திட்டம் ஆயுள் காப்பீடு, வழக்கமான வருமானம் மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வின் போது குழந்தையின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்கிறது.
மேலும் குறிப்பிட்ட இடைவெளியில் பணம் திரும்பப் பெறுதல் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.
திட்டத்தின் பலன்கள்
எதிர்பாராத நிகழ்வுகளின் போது குடும்பத்தின் நிதித் தேவைகளைப் பாதுகாப்பதற்காக குழந்தைக்கான ஆயுள் காப்பீடு திட்டத்தில் அடங்கும்.
குழந்தை வளரும் ஆண்டுகளில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடைவெளியில் வழக்கமான வருமானத்தை வழங்குகிறது.
செலுத்தப்பட்ட பிரீமியங்கள் மற்றும் பெறப்பட்ட முதிர்வுத் தொகை ஆகிய இரண்டிற்கும் வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் 80C மற்றும் 10(10D) ஆகியவற்றின் கீழ் வரிச் சலுகைகள் உண்டு.
0 முதல் 12 வயது வரை உள்ள குழந்தையின் சார்பாக எந்தவொரு பெற்றோரும் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரும் இந்தப் பாலிசியை எடுக்கலாம்.
ரூ.10 லட்சம் பெறுவது எப்படி?
ஒருவர் 20 வருட பாலிசி காலத்தைத் தேர்ந்தெடுத்து பிரிமீயமாக ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் முதலீடு செய்தால் முதிர்ச்சியின்போது ரூ.10 லட்சம் கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் என்பது ஒரு நாளைக்கு ரூ.82 ஆகும். மேலும், ஏதேனும் துரதிருஷ்டவசமான நிகழ்வு ஏற்பட்டால் நாமினி ரூ.10 லட்சத்தை பெறுவார். மேலும் 18,20 அல்லது 22 வயதுகளில் பாலிசிதாரரின் மகன் ரூ.2 லட்சம் பெற்றுக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“