Advertisment

5 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆவது எப்படி? இந்த மாதாந்திர முதலீட்டை பாருங்க!

Mutual fund: முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபிகளில் 12-16% வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
5 small cap schemes with 24pc to 30pc returns

மாதாந்திர எஸ்ஐபி ₹1 லட்சம் மூலம் 5 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்களில் ஒரு நபர் கோடீஸ்வரர் ஆகலாம்.

Mutual fund: ₹1 கோடி சம்பாதிப்பது உங்கள் இலக்கு எனில் அதற்கு 5 ஆண்டுகள் 10 மாதங்கள் போதும்.

இதற்கு முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) உதவி செய்யும். இந்தத் திட்டத்தின் மூலம் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தால் நல்ல ரிட்டனை எதிர்பார்க்கலாம்.

Advertisment

ஏனெனில் முதலீட்டாளர்கள் கூட்டுத்தொகையின் பலனைப் பெறுகிறார்கள். மேலும், மியூச்சுவல் ஃபண்ட் (எம்எஃப்) முதலீட்டாளர்கள் வருடாந்தர ஸ்டெப்-அப் இல்லாமல் SIP மூலம் கோடீஸ்வரராக மாற விரும்பினால், அவர்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையைப் பொறுத்து அது சாத்தியமாகும்.

MFI, FundsIndia Research இன் தரவுகளின்படி, SIP தொகை ₹10,000 முதலீட்டாளரை 20 ஆண்டுகளில் கோடீஸ்வரனாக்கும்.

அதன்படி, 15 ஆண்டுகளில் ₹20,000 ஆகவும், 13 ஆண்டுகளுக்கு மேல் 25,000 ஆகவும், 12 ஆண்டுகளுக்கு மேல் ₹30,000 ஆகவும் இருக்க வேண்டும்.

₹40,000 மாதாந்திர SIP முதலீடு மூலம் ஒருநபர் 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம். ₹50K மாதாந்திர SIP உங்களை கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளில் கோடீஸ்வரராக்கும்.

தொடர்ந்து, . ஏழு ஆண்டுகளில் ₹75 ஆயிரமும், ரூ.1 லட்சம் முதலீடு 5 ஆண்டுகள் 10 மாதங்களில் கோடீஸ்வரனாக்கும்.

அதாவது, ஒருவரின் எஸ்ஐபியில் நீண்ட காலத்திற்கு 12 முதல் 16% வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mutual Fund
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment