2023-24 ஆம் ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையை (ஐடிஆர்) படிவம் 16 இல்லாமல் தாக்கல் செய்யலாம் என வரி நிபுணர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
எப்படி சாத்தியம்?
ஐடிஆர் படிவம் 16 இல்லாமல் வரி தாக்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
- சம்பந்தப்பட்ட நிதி ஆண்டில் சம்பள ரசீது அனைத்தையும் சேகரித்து சம்பளம், விலக்கு, மற்ற விவரங்களை தயார் செய்துகொள்ள வேண்டும்.
- சம்பளச் சீட்டுகளில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி, ரிக்குரிய வருமானம் கணக்கிடப்பட வேண்டும். வீட்டு வாடகையை கழிக்க வேண்டும்.
- கூடுதல் வருமான ஆதாரங்களை அடையாளம் காண தங்களின் வங்கி அறிக்கையை மதிப்பாய்வு செய்வது அவசியம்.
- வருமான வரித் துறை இணையதளம் மூலம் படிவம் 26AS-ஐச் சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது.
- TDS விவரங்கள் கணக்கிடப்பட்ட வருமான விவரங்களுடன் பொருந்துவதை உறுதி செய்வது அவசியம்.
- முரண்பாடுகள் தென்பட்டால் அதனை சரிசெய்வதற்காக பணியாளரை தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி ITR ஐ வெற்றிகரமாக தாக்கல் செய்யலாம். மேலும், 2022-23-ம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய தேதி ஜூலை 31 என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“