மத்திய அரசின் ஆதரவு பெற்ற முதலீட்டு திட்டமான பி.பி.எஃப் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. இதில் 7.1 சதவீதம் கூட்டு வட்டி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் ஒருவரால் ஒவ்வொரு மாதமும் அதிகப் பணத்தை சேமிக்க முடியாவிட்டாலும் குறைந்த அளவிலான பணத்தையாவது முதலீடு செய்ய முடியும்.
மேலும் இந்தத் திட்டத்தில் மாதம் ரூ. 500ல் முதலீட்டில் இணையலாம். இத்தகைய சிறிய தொகையிலான மாதாந்திர முதலீட்டுத் திட்டங்கள் சில ஆண்டுகளில் உங்களுக்கு லட்சக்கணக்கான தொகையை பெற உதவும்.
ரூ.1 கோடி சேமிப்பது எப்படி?
பி.பி.எஃப் திட்டத்தில், 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.12500 முதலீடு செய்வதன் மூலம் ரூ.40 லட்சத்துக்கு மேல் கிடைக்கும்.
அந்த வகையில், இந்த திட்டத்தை தலா 5 ஆண்டுகளுக்கு இரண்டு முறை நீட்டித்தால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் ரூ.1.03 கோடி கிடைக்கும்.
இதில் உங்கள் மொத்த முதலீடு ரூ.37.50 லட்சமாக இருக்கும். அதேசமயம் வட்டியில் இருந்து ரூ.65.58 லட்சம் கிடைக்கும். நீங்கள் முதிர்வு காலத்தை நீட்டிக்க விரும்பினால், அதை 1 வருடத்திற்கு முன்பே உங்கள் வங்கி அல்லது அஞ்சலக கிளைக்கு தெரிவிக்க வேண்டும்.
வரி விலக்கு
பி.பி.எஃப் திட்டத்தின் முக்கிய நன்மை என்னவென்றால், கணக்கு வைத்திருப்பவர் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெறுகிறார்.
கணக்கு வைத்திருப்பவர்கள் பிபிஎஃப் முதலீடுகளில் ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி பெறலாம். பிபிஎஃப் திட்டத்தில் பெறப்பட்ட வட்டிக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“