Advertisment

மூத்தக் குடிமக்களே ரூ.1,11,000 ஓய்வூதியம் வேண்டுமா? எல்.ஐ.சி.யின் இந்தப் பாலிசியை பாருங்க!

LIC PMVVY திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2023 ஆகும்.

author-image
Jayakrishnan R
New Update
How to Get up to Rs 1 lakh year with PMVVY

வருடாந்திர ஓய்வூதியத்திற்கு, குறைந்தபட்ச பாலிசி ரூ.1,56,658 ஆகவும், அதிகபட்ச பாலிசி ரூ.14,49,086 ஆகவும் உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2020-ல் PMVVY (பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா) திட்டத்தை மாற்றியமைத்தது.

இந்த பாலிசி எல்.ஐ.சி. மூலமாக கிடைக்கிறது. இந்தப் பாலிசியை வாங்குவதற்கான கடைசித் தேதி மார்ச் 31, 2023 ஆகும். வரவிருக்கும் பட்ஜெட் அறிவிப்பின்போது ஒருவேளை இந்த காலம் திருத்தப்படலாம், அல்லது அப்படியே தொடரலாம்.

Advertisment

வட்டி

திருத்தப்பட்ட PMVVY திட்டத்தின் விதிகளின்படி, மூத்த குடிமக்கள் தற்போது ரூ. 15 லட்சம் வரை பாலிசியில் முதலீடு செய்தால் அவர்களுக்கு 7.4 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்.

அதாவது, நீங்கள் PMVVY பாலிசியை ரூ.15 லட்சத்திற்கு வாங்கினால், 7.4%, வட்டி வீதம் 10 வருட பாலிசி காலம் முடியும் வரை ரூ.1.1 லட்சம் வட்டி வருமானம் கிடைக்கும்.

இந்நிலையில், எல்ஐசி PMVVY திட்டத்தின் வருமானம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

குறைந்தப்பட்ச ஓய்வூதியம்

  • ஒவ்வொரு மாதமும் ரூ.1000
  • காலாண்டு ரூ.3000 (3 மாதம்)
  • அரையாண்டு ரூ.6 ஆயிரம் (6 மாதம்)
  • ஓராண்டு ரூ.12 ஆயிரம் (12 மாதம்)

அதிகப்பட்ச ஓய்வூதியம்

  • ஒவ்வொரு மாதமும் ரூ.9250
  • ஒவ்வொரு காலாண்டும் ரூ.27750
  • ஒவ்வொரு அரையாண்டும் ரூ.55500
  • ஓராண்டுக்கு ரூ.111000

பாலிசி விவரங்கள்

  • வருடாந்திர ஓய்வூதியத்திற்கு, குறைந்தபட்ச பாலிசி ரூ.1,56,658 ஆகவும், அதிகபட்ச பாலிசி ரூ.14,49,086 ஆகவும் உள்ளது.
  • அரையாண்டு ஓய்வூதியத்திற்கு, குறைந்தபட்ச பாலிசி ரூ.159,574 ஆகவும், அதிகபட்ச பாலிசி ரூ.14,76,064 ஆகவும் உள்ளது.
  • காலாண்டு ஓய்வூதியத்திற்கு, குறைந்தபட்ச பாலிசி ரூ.161,074 ஆகவும், அதிகபட்ச பாலிசி ரூ.14,89,933 ஆகவும் உள்ளது.
  • மாதாந்திர ஓய்வூதியத்திற்கு, குறைந்தபட்ச பாலிசி ரூ.162,162 ஆகவும், அதிகபட்ச பாலிசி ரூ.15,00,000 ஆகவும் உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்

PMVVY என்பது உறுதிசெய்யப்பட்ட மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர பணப்புழக்கத்தை விரும்பும் மூத்த குடிமக்களுக்கான சிறந்த திட்டமாகும்.

ந்தத் திட்டமானது 7.4% வட்டியையும் வழங்குகிறது, இது 10 ஆண்டுகளுக்கான பல நிலையான வைப்புத் திட்டங்களை விட அதிகமாகும்.

இந்தத் திட்டத்தில், 10 வருட பாலிசி காலம் முடிந்த பிறகு, ஓய்வூதியத்தின் கடைசி தவணையுடன் பாலிசிதாரருக்குத் திருப்பித் தரப்படும்.

LIC PMVVY திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2023 ஆகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Lic Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment