லாக் டவுனில் நிதிச்சுமையா? – உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி?

How to withdraw from EPF? - அந்த பக்கத்தின் கீழே உள்ள Proceed For Online Claim எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

By: August 6, 2020, 7:36:35 PM

How to withdraw EPF money Coronavirus pandemic: கொரோனா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. நிறுவனங்களில், அலுவலகங்களில் வேலை பார்ப்போர் சம்பளம் பிடித்தம் அல்லது ஊதியம் கிடைக்காத நிலையை கடந்த 3 மாதங்களாக சந்தித்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், நிதித் தேவைகளுக்கு தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

உங்களுக்கு பணத்தேவை இருக்கும் பட்சத்தில், பி.எப் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

எவ்வளவு பணம் கிடைக்கும்?

1. உங்கள் பி.எஃப் கணக்கில் இருந்து 75% தொகை அல்லது உங்கள் மொத்த ஊதியத்தில் மூன்று மாத அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி. இதில் எது குறைவோ அந்த பணம் கிடைக்கும்.

2. எடுத்துக்காட்டாக, உங்கள் அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி சேர்த்து ₹ 30,000 என்று வைத்துக்கொள்வோம். உங்கள் பிஎஃப் கணக்கில் ₹ 3 லட்சம் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

3 மாதம் அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி = ₹ 90,000 ( ₹30,000 x 3)

அல்லது

75 % பிஎஃப் பணம் = ₹ 2,25,000

இதில் நீங்கள் ₹ 90,000 பணத்தை மட்டுமே எடுக்க முடியும்.

பிஎஃப் பணத்தை பெற நீங்கள் அப்ளை செய்வது எப்படி?

ஸ்டெப் 1: கூகுளில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ இணைய தள பக்கத்தை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் 2: அதில், உங்களது UAN எண் அதற்குரிய பாஸ்வேர்டை குறிப்பிடுங்கள். ஒருவேளை, நீங்கள் பாஸ்வேர்டை மறந்திருந்தால், கீழே உள்ள ‘Forgot Password’ ஆப்ஷனை க்ளிக் செய்து, புதிய பாஸ்வேர்டை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 3: Password ஆப்ஷனுக்கு கீழ் உள்ள Captcha-வையும் சரியாக குறிப்பிட வேண்டும். பிறகு Sign in பட்டனை க்ளிக் செய்தால், உங்கள் பக்கம் லாக் இன் ஆகி பிஃஎப் தளத்திற்குள் செல்லும்.

ஸ்டெப் 4: அதில், ‘online Services’ எனும் ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை க்ளிக் செய்யும் போது, அதில் கீழ்கண்டவாறு நான்கு ஆப்ஷன்கள் ஓப்பன் ஆகும். அதில், நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது CLAIM (FORM-31, 19, 10C&10D) இதைத் தான்.

ஸ்டெப் 5: CLAIM (FORM-31, 19, 10C&10D) ஆப்ஷனை க்ளிக் செய்த பிறகு, உங்களது தனிப்பட்ட பிஎஃப் தகவல்கள் கொண்ட படிவம் ஓப்பன் ஆகும். இந்த படிவத்தில், உங்களது அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். (செய்திக்காக கீழுள்ள புகைப்படத்தில் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன).

இந்த படிவத்தில், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம், BANK ACCOUNT No. (As seeded against UAN) என்ற ஆப்ஷனுக்கு அருகில் உள்ள பாக்சில், உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை டைப் செய்து, Verify கொடுக்க வேண்டும். உங்கள் வங்கி கணக்கு எண், உங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் வங்கிக் கணக்கு சரியானது என்று கீழே டிஸ்பிளே ஆகும்.

ஒருவேளை, தவறாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் உங்கள் சரியான வங்கிக் கணக்கு எண்ணை பிஎஃப் கணக்குடன் இணைக்க வேண்டும்.

 

ஸ்டெப் 6: பிறகு, அந்த பக்கத்தின் கீழே உள்ள Proceed For Online Claim எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 7: இப்போது, புதிதாக ஓப்பனாகியிருக்கும் பக்கத்தில், ‘I want to Apply for’ என்றொரு ஆப்ஷன் இருக்கும். அத்தைக்கு க்ளிக் செய்து, PF ADVANCE (FORM-31) எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்கள் இறுதி படிவம் ஓப்பனாகும். அதில், select purpose of withdrawal எனும் ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில், ‘Outbreak of pandemic (COVID-19)’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதே பக்கத்தில், எவ்வளவு தொகை நீங்கள் Claim செய்ய விரும்புகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.

ஸ்டெப் 8: பிறகு, உங்கள் முகவரியை டைப் செய்து, உங்கள் செக்கின் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 9: இப்போது, உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு, OTP எண் வரும்.

ஸ்டெப் 10: அதை சரியாக பதிவிட்டவுடன், உங்கள் பிஎஃப் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு, பிராசஸ் செயல்படாத துவங்கும்.

நீங்கள் விண்ணப்பித்த 3 – 8 நாட்களில் உங்கள் அக்கவுண்ட்டில் பணம் கிரெடிட் ஆகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:How to withdraw pf amount from epf due to coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X