Advertisment

புதிய ஃபிக்ஸட் டெபாசிட்டை அறிமுகப்படுத்திய ஐ.டி.பி.ஐ வங்கி: வட்டி விகிதத்தை செக் பண்ணுங்க

ஐ.டி.பி.ஐ வங்கி புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Unity Small Finance Bank latest FD interest rates

ஐடிபிஐ வங்கி சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 375 நாள்கள் கொண்ட இந்தப் புதிய திட்டம் ஜூலை 14, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.

Advertisment

இந்தத் திட்டத்தில் ஐடிபிஐ வங்கி பொது மக்களுக்கு 7.10 சதவீதமும், மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீதமும் வட்டி வழங்குகிறது.

ஐடிபிஐயின் அம்ரித் மஹோத்சவ் எஃப்டி 375 நாள்கள் மற்றும் 444 நாள்கள் கால அளவில் கிடைக்கிறது. இது, ஆகஸ்ட் 15, 2023 வரை செல்லுபடியாகும்.

444 நாள்கள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்

இந்தத் திட்டத்தில் 7.75 சதவீதம் மூத்தக் குடிமக்களுக்கும், 7.25 சதவீதம் பொதுமக்களும் வட்டியாக கிடைக்கும்.

ஐடிபிஐ வட்டி விகிதம்

07-30 நாட்கள் 3.00%, 31-45 நாட்கள் 3.25%, 46- 90 நாட்கள் 4.00%, 91-6 மாதங்கள் 4.50%, 6 மாதங்கள் 1 நாள் முதல் < 1 வருடம் 5.75%, 1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை (375 நாள்கள் மற்றும் 444 நாள்கள் தவிர) 6.80% ஆகும்.

மேலும், > 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 6.50%, > 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை 6.25%, > 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை $ 4.80% 5 ஆண்டுகள் 6.50 சதவீதமும் கிடைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment