Advertisment

தனியார் வங்கியாக செயல்பட போகும் ஐ.டி.பி.ஐ., அரசின் 15 சதவீத பங்கின் நிலை என்ன?

ஐ.டி.பி.ஐ., வங்கி இனிவரும் காலங்களில் இந்திய தனியார்துறை வங்கியாக செயல்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IDBI Bank to continue as Indian private sector bank post strategic sale

ஐ.டி.பி.ஐ., வங்கி

ஐ.டி.பி.ஐ., வங்கி இனிவரும் காலங்களில் இந்திய தனியார்துறை வங்கியாக செயல்படும்; அரசின் 15 சதவீத பங்குகள் பொதுத்துறை பங்குகளாக கருதப்படும் என்று நிதியமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (நவ.27) தெளிவுப்படுத்தியுள்ளது.

Advertisment

இந்தத் தெளிவுபடுத்தல்கள், நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (DIPAM), சாத்தியமான முதலீட்டாளர்களின் முந்தைய கேள்விகளுக்கு அளித்த பதில்களின் ஒரு பகுதியாகும்.

முன்னதாக, ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்குவதற்கான ஏலங்களுக்கு அக்டோபர் 7 ஆம் தேதி அழைத்தது. தொடர்ந்து, மொத்தம் 60.72 சதவீத பங்குகளை விற்கும் எனவும் கூறியது.

இந்த நிலையில், , ஐடிபிஐ வங்கியில் அரசாங்கம் 15 சதவீத பங்குகளையும், எல்ஐசி 19 சதவீத பங்குகளையும் வைத்திருக்கும், இதன் மூலம் அவர்களின் மொத்த பங்கு 34 சதவீதமாக இருக்கும்.

மேலும், சாத்தியமான முதலீட்டாளர்கள் குறைந்தபட்ச நிகர மதிப்பு ரூ. 22,500 கோடியாக இருக்க வேண்டும். இந்த கூட்டமைப்பில் அதிகபட்சமாக நான்கு உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bank News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment