மாதம்தோறும் வட்டி தந்து விடுவார்களாம்… முக்கிய வங்கி அறிவிப்பு!

If you have savings account in this bank, enjoy monthly interest credit benefit: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி வலைத்தளத்தின்படி, வங்கி அதன் அனைத்து சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கும் 2021 ஜூலை 1 முதல் மாதாந்திர வட்டி வசதியை செயல்படுத்தும்

EPFO, Money news, savings, retirement plans, retirement savings

ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி அதன் அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கும் மாதாந்திர வட்டி வசதியை வழங்குகிறது. ஜூலை 1 முதல் சேமிப்பு கணக்கிற்கான வட்டி மாத அடிப்படையில் வரவு வைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விதிமுறைகளின்படி, வங்கிகள் காலாண்டு அடிப்படையில் வைப்புத்தொகையாளர்களின் கணக்குகளுக்கு வட்டி செலுத்துகின்றன. இருப்பினும், ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி மாதாந்திர அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.

பொதுவாக, நிலையான வைப்புத்தொகையைப் பொறுத்தவரை, வங்கிகள் மாதாந்திர, காலாண்டு, வருடாந்திர அடிப்படையிலும், சேமிப்புக் கணக்குகளுக்கு ஒட்டுமொத்தமாகவும் வட்டி வழங்குகிறார்கள். ஒரு காலாண்டு அல்லது ஆண்டின் இறுதிக்கு காத்திருப்பதை விட, வட்டி தொகையை மாதந்தோறும் வரவு வைப்பது  வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் உதவுக்கூடியது.

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி வலைத்தளத்தின்படி, வங்கி அதன் அனைத்து சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கும் 2021 ஜூலை 1 முதல் மாதாந்திர வட்டி வசதியை செயல்படுத்தும். மேலும், மாதாந்திர வட்டி வரவு மற்றும் காலாண்டு வட்டி வரவை வாடிக்கையாளர் தேர்வு செய்ய முடியாது. அனைத்து சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கும் இயல்புநிலையாக மாதாந்திர வட்டி வசதி வழங்கப்படும்.

வல்லுநர்களின் கூற்றுப்படி, கூட்டு வட்டி காரணமாக வருவாய் அதிகரிப்பது ஓரளவு இருக்கக்கூடும். சேமிப்பு கணக்குகளுக்கு சராசரியாக 3% வட்டி விகிதத்தைக் கருத்தில் கொண்டு, ஐடிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு காலாண்டு வட்டிக்கு மேல் 0.0074% கூடுதல் ஆக வட்டி கிடைக்கும். இது தவிர வைப்புத்தொகையாளர்களுக்கு மேலும் சில ஆதாயங்களும் உள்ளன.

வட்டி விகிதங்கள் தினசரி அடிப்படையில் கணக்கிடப்படும். இவ்வாறு சம்பாதித்த ஒட்டுமொத்த வட்டி மாதாந்திர அடிப்படையில் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். சேவைகள் மற்றும் அம்சங்களில் எந்த மாற்றங்களும் இருக்காது. வாடிக்கையாளர்களின் நலனுக்காக இந்த வசதி கிடைக்கப்பெறுகிறது, இதனால் அவர்கள் சேமிப்புக் கணக்குகளில் வட்டித் தொகையைப் பெற மூன்று மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை என்று வங்கி தெரிவித்துள்ளது. அதேநேரம், சேமிப்புக் கணக்கு தொடர்பான அனைத்து சேவைகளும் சலுகைகளும் அப்படியே இருக்கும்.

வங்கியைப் பொறுத்தவரை, சேமிப்புக் கணக்குகளுக்கு பராமரிக்கப்பட வேண்டிய குறைந்த பட்ச இருப்பில் எந்த மாற்றங்களும் இல்லை. குறைந்தபட்சம் 10,000 ரூபாய் இருப்பு உள்ள கணக்குகளுக்கும், குறைந்தபட்சம் ரூ .25,000 உள்ள கணக்குகளுக்கும் இது பொருந்தும். சேமிப்புக் கணக்கில் சம்பாதித்த வட்டிக்கு TDS பொருந்தாது.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, வங்கிகள் ஒரு நாள் முடிவில் நிலுவையில் உள்ள தொகைக்கு வட்டியைக் கணக்கிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2016 இல், ரிசர்வ் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை காலாண்டு அடிப்படையில் வரவு வைக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியது, இதற்கு முன்னர் இது அரை ஆண்டு அடிப்படையில் வரவு வைக்கப்பட்டது.

ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் விஷயத்தில், வட்டி ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி சேமிப்பு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வட்டி விகிதம் மற்றும் கணக்கின் பிற அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது.

சேமிப்புக் கணக்கில் நிலுவைகளைப் பொறுத்து ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஆண்டுக்கு 3-5% வட்டி விகிதத்தை வழங்குகிறது. கணக்கில் நிலுவை ரூ .10 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அது ஆண்டுக்கு 4% வட்டி பெறும். நிலுவைத் தொகை ரூ .10 லட்சத்துக்கு மேல் ஆனால் ரூ .2 கோடிக்கும் குறைவாக இருந்தால், வங்கி ஆண்டுக்கு 5% வட்டி செலுத்தும். நிலுவைத் தொகை ரூ .100 கோடிக்கு மேல் இருந்தால், அது ஆண்டுக்கு 3% வீதத்தில் வட்டி பெறும்.

ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி, சில வங்கிகளைப் போலவே, சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது கடந்த ஆண்டு ஆண்டுக்கு 7% வட்டி விகிதத்தை வழங்கியது. இருப்பினும், இப்போது இது ஆண்டுக்கு 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: If you have savings account in this bank enjoy monthly interest credit benefit

Next Story
15 நாளில் புதிய ரேஷன் கார்டு… தேவையான ஆவணங்கள் இவைதான்!Which category ration cards are eligible for getting rs 1000, குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய், குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய், தமிழ்நாடு அரசு, who are eligible for rs 1000 for married women, tamil nadu, dmk, mk stalin, rs 1000 for married women
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com