ஆர்.சந்திரன்
ஜனவரி மாதத்தின் 15ம் நாளில், இந்திய பங்குசந்தை ஏற்றத்தில் முடிந்தது. மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 141 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 35,297 என்ற அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 44 புள்ளிகள் முன்னேறி 10,545 என்ற நிலையிலும் தமது வணிகத்தை முடித்தன.
நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் நேற்று கண்ட சரிவைத் தாண்டி, இன்றைய வணிகத்தின் முடிவில் 8 சதவீதம் வரை சரிவு கண்டிருந்தது. இந்திய மற்றும் ஆசிய சந்தையில் மட்டுமின்றி, சர்வதேச சந்தையிலும் இன்று நம்பிக்கையின் கீற்றைப் பார்க்க முடிந்தது. வங்கி பண மோசடியின் நிழலில் பல வங்கிகளின் பெயர் இடம்பெற்றிருந்தாலும்.
நேற்றைய வணிகத்தில் வங்கித் துறை குறியீடு ஏற்றத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நடைமுறைகள் வங்கிகளுக்கு உடனடி பாதிப்புகளைத் தந்தாலும் நீண்டகாலம் நம்பிக்கை அளிப்பதாக இருப்பதே இந்த ஏற்றத்தக்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஆட்டோ, மீடியா மற்றும் ஃபார்மா துறை பங்குகள் சரிவில் இருந்தன.