மிக உறுதியான பாதையில் இந்திய பொருளாதாரம்: சர்வதேச பண நிதியம் தலைவர்!

வரும் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அதிக உறுதித் தன்மை பெற்று, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிக அளவில் பெற்றுத் தரும்

வரும் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அதிக உறுதித் தன்மை பெற்று, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிக அளவில் பெற்றுத் தரும்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
மிக உறுதியான பாதையில் இந்திய பொருளாதாரம்: சர்வதேச பண நிதியம் தலைவர்!

இந்தியாவின் பொருளாதாரம் மிக உறுதியான பாதையில் பயணம் செய்துக் கொண்டிருப்பதாக உலகப் பண நிதியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அந்த அமைப்பின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே, பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. ஆகிய இரு சீர்திருத்தங்களும் மிகச் சிறப்பு வாய்ந்தவை என்று கூறி உள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் பேசுகையில், " பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி ஆகிய இந்த இரு சீர்திருத்தங்களால் இந்திய பொருளாதாரத்தில் தற்போது சிறிது மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பண வீக்கம் மற்றும் பணப் பற்றாக்குறை கணிசமான அளவு குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த இரு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் வரும் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அதிக உறுதித் தன்மை பெற்று, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிக அளவில் பெற்றுத் தரும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டெல்லியில் உள்ள நிர்வாக செயலாளர்கள் இன்ஸ்டிடியூட்டின் கோல்டன் ஜூப்ளி ஆண்டின் திறப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, "ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்து உள்ளது. அதை சரிசெய்யும் பொறுப்புடன் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று வருடங்களில் 7.5 சதவிகித வளர்ச்சியை அடைந்த பொருளாதாரம், ஏப்ரல்-ஜூன் மாத காலாண்டில் சரிவடைந்துவிட்டது. 2016ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதிக்கு முன்னால், 12 சதவிகிதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 9 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இரட்டை இலக்க பணவீக்கம் தற்போது மூன்று சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியவை 2.5 மற்றும் 3.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார அடிப்படையானது வலுவாகவும், சீர்திருத்த செயல்முறை மற்றும் நிதி நிலைத்தன்மையை மனதில் வைத்தும் அரசு தொடர்ந்து செயல்படும். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு முடிவுகள் போன்ற அரசாங்கத்தின் முடிவுகள் நாட்டின் வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்" என்று கூறியிருந்தார்.

Advertisment
Advertisements

முன்னதாக, அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அங்கு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், 'ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவற்றை நடைமுறைப்படுத்த மிகுந்த தைரியம் வேண்டும். இதைப் போன்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. உலகமே கடந்த மூன்று ஆண்டுகளாக பொருளாதார மந்தநிலையில் இருக்கிறது. ஆனாலும் இந்தியா தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறது" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், உலகப் பண நிதியம் அமைப்பின் தலைவரும், கடந்த இரு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் வரும் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அதிக உறுதித் தன்மை பெற்று, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிக அளவில் பெற்றுத் தரும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Gst

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: