இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி.. டெக் மஹிந்திரா பங்குகள் 3 சதவீதம் உயர்வு

இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தில் சரிந்தன. டெக் மஹிந்திரா, மாருதி சுசூகி உள்ளிட்ட நிறுவன பங்குகள் நல்ல லாபம் கொடுத்தன.

இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தில் சரிந்தன. டெக் மஹிந்திரா, மாருதி சுசூகி உள்ளிட்ட நிறுவன பங்குகள் நல்ல லாபம் கொடுத்தன.

author-image
Jayakrishnan R
New Update
Stock Market Today 23 March 2023

பங்குச் சந்தை இன்றைய நிலவரம் மார்ச் 23 2022

இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் புதன்கிழமை (அக்.26) வர்த்தகத்தை நிறைவு செய்தன.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை பி.எஸ்.இ., சென்செக்ஸ் குறியீட்டெண் 287.7 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 74.4 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டன.

Advertisment

மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் டாக்டர் ரெட்டிஸ் லேப், இன்ஃபோசிஸ், லார்சன் அண்ட் டர்போ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்று்ம மாருதி சுசூகி உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தில் வணிகமாகின.
மறுபுறம் ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.

டெக் மஹிந்திரா

Advertisment
Advertisements

டெக் மஹிந்திரா நிறுவன பங்குகள் பி.எஸ்.இ., வணிகத்தில் 3.29 சதவீதமும், என்.எஸ்.இ., வணிகத்தில் 3.28 சதவீதமும் லாபத்தில் வணிகமாகி பி.எஸ்.இ.யில் ஒரு பங்கின் விலை ரூ.1082.55 எனவும் என்.எஸ்.இ.,யில் 1082.50 எனவும் வணிகமானது.

தேசிய பங்குச் சந்தை

50 பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தையில்பார்தி ஏர்டெல், பிபிசில், சிப்லா, டாக்டர் ரெட்டிஸ் லேப், ஈஸர் மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் லாபத்திலும், அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஏசி்யன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தையும் சந்தித்தன.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை 0.48 சதவீதமும், தேசிய பங்குச் சந்தை 0.42 சதவீதமும் சரிந்துள்ளது.
இந்த நிலையில் ஆசிய சந்தை இன்று வலுவுடனே காணப்பட்டது. லாபத்திலும் வணிகத்தை நிறைவு செய்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nse Nifty Sensex Bombay Stock Exchange

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: