Advertisment

உஷார்... ரயிலில் அதிக லக்கேஜ் கொண்டு போறீங்களா? 6 மடங்கு அபராதம் அறிவிப்பு

கூடுதல் உடமைகளை கொண்டு செல்ல இந்தியன் ரயில்வே கட்டணம் வசூலிக்க உள்ளது. தனிக் கட்டணம் செலுத்தாமல் நீங்கள் கூடுதல் உடமைகளை எடுத்து சென்றால் 6 மடங்கு அபராதம் கட்ட நேரிடும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

author-image
Vasuki Jayasree
New Update
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

Indian railway to charge for extra luggage, கூடுதல் உடமைகளை கொண்டு செல்ல இந்தியன் ரயில்வே கட்டணம்  வசூலிக்க உள்ளது. தனிக் கட்டணம் செலுத்தாமல் நீங்கள் கூடுதல் உடமைகளை எடுத்து சென்றால் 6 மடங்கு அபராதம் கட்ட நேரிடும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisment

பொதுவாக விமானம் மூலம் பயணம் செய்யும்போது நீங்கள் கொண்டு செல்லும் உடமைகளுக்கு தனிக்கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட கிலோ அளவு வரையில்தான் பயணிகள் இலவசமாக விமானத்தில் உடமைகளை   எடுத்துச்செல்ல  முடியும். குறிப்பாக ஒரு தனி நபர் விமானத்தில் பயணித்தால் 7 கிலோ வரை உள்ள உடமைகளை அவருடன் கொண்டு செல்லலாம். அதுபோலவே  கூடுதலாக 25 கிலோ வரை உள்ள உடமைகளை விமானம் சுமந்து வரும். இதற்கும் கூடுதலாக உடைமைகள் இருந்தால் அதற்கு தனிக் கட்டணம் செலுத்த வேண்டும்.  தற்போது இந்தியன் ரயில்வேயும் இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது. கூடுதல் கட்டணம் செலுத்தாவிட்டால் 6 மடங்கு அபராதம் செலுத்தும் நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இலவசமாக எவ்வளவு உடமைகளை எடுத்துச் செல்ல முடியும்?

ஏசி முதல் வகுப்பில் பயணித்தால் 70 வது கிலோ வரையில் இலவசமாக எடுத்துச் செல்லலாம். அதுவே ஏசி -2 டையர் வகுப்பில் பயணித்தால் 50 கிலோ வரையிலும் , ஏசி-3 டையர் வகுப்பில் பயணித்தால்  40  கிலோ  வரையிலும் இலவசமாக எடுத்துச் செல்லலாம். அதுபோல ஸ்லீபர் வகுப்பில் (sleeper class) பயணித்தால் 40 கிலோ வைரையிலும் செக்கண்டு கிளாஸில் பயணித்தால் 35 கிலோ வரையில் இலவசமாக கொண்டுச் செல்ல முடியும்.

இதற்கும் கூடுதலாக நீங்கள் எடுத்துச் சென்றால் குறைந்தபட்சமாக ரூ.30 -லிருந்து கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஏசி முதல் வகுப்பில் பணிப்பவர்கள் அதிகபட்சமாக 150 கிலோ உடமைகளையும், ஏசி -2 டையர் வகுப்பில் பயணிப்பவர்கள் 100 கிலோ வரையிலும், , ஏசி-3 டையர் வகுப்பில் பயணிப்பவர் 40 கிலோ வரையிலும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர். அதுபோலவே ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பவர் அதிகபட்சமாக 80 கிலோ வரையிலும், செக்கண்ட் கிளாஸில் பயணிப்பவர் 70 கிலோ வரையிலும் கொண்டுச் செல்ல முடியும்.

நீங்கள் கூடுதலாக உடமைகளை கொண்டு செல்ல விரும்பினால், உடமைகளை நன்றாக பேக் செய்து ரயில்வே உடமைகளை புக் செய்யும் அலுவலகத்திற்கு  கொண்டு சேர்க்க வேண்டும். நீங்கள் பயணிக்கும் ரயில் புறப்படும் அரை மணி நேரத்திற்கு முன்பாக உடமைகளை புக் செய்ய வேண்டும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment