scorecardresearch

நாளொன்றுக்கு ரூ.29 முதலீடு.. லட்சக் கணக்கில் ரிட்டன்.. பெண்களுக்கான எல்.ஐ.சி. திட்டம் இதோ!

எல்ஐசியின் ஆதார் ஷீலா என்பது பெண்களின் வாழ்க்கைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும்

LIC Aadhaar Shila Policy
எல்ஐசியின் ஆதார் ஷீலா திட்டத்தில் 8 வயது முதல் முதலீடு செய்யலாம்.

எல்.ஐ.சி., காப்பீடுடன் கூடிய முதலீட்டை வழங்குகிறது. இதனால் முதலீட்டாளர்களின் தனிப்பட்ட தேவைகளோடு பாதுகாப்பும் கிடைக்கிறது.
இந்த நிலையில், எல்ஐசியின் ஆதார் ஷீலா என்பது பெண்களின் வாழ்க்கைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும், இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் அம்சமாக திகழ்கிறது.
மேலும் இந்தத் திட்டம் அதன் ஆட்டோ கவர் மற்றும் கடன் வசதி மூலம் பணப்புழக்கத் தேவைகளையும் கவனித்துக்கொள்கிறது.

லட்சக் கணக்கில் ரிட்டன் பெறுவது எப்படி?
உதாரணமாக இந்தத் திட்டத்தில் 30 வயதில் நீங்கள் இணைந்தால், ஓராண்டில் ரூ.10,959 சேமித்திருப்பீர்கள். அதுவே 20 ஆண்டில் ரூ.2,14,696 ஆக காணப்படும்.

இந்தப் பணம் 20 ஆண்டுகால முதிர்ச்சியின்போது ரூ.3 லட்சத்து 97 ஆயிரமாக காணப்படும். இந்தத் திட்டத்தில் 8 வயது முதல் முதலீடு செய்யலாம்.
அதிகப்பட்ச வயது 55 ஆகும். பாலிசியின் காலம் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் ஆகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Invest as little as rs 29 per day to get lakhs of rupees upon maturity