scorecardresearch

LIC Aadhar Stambh: ரூ.3 லட்சம் ரிட்டன் பெற ரூ.10 ஆயிரம் முதலீடு செய்யுங்கள்!

எல்ஐசி ஆதார் ஸ்டாம்ப் ஒரு விரிவான, இணைக்கப்படாத எண்டோவ்மென்ட் உத்தரவாதத் திட்டமாகும்.

Benefits and advantages of LIC Jeevan Umang Plan
இந்தத் திட்டத்தில் ஒருவர் ரூ.10 லட்சம் ரிட்டன் பெற நீண்ட கால முதலீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.

எல்ஐசி ஆதார் ஸ்டாம்ப்: எல்ஐசி ஆதார் ஸ்டாம்ப் திட்டம் விரிவான காப்பீட்டுத் தீர்வைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
இந்த எண்டோவ்மென்ட் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஆதார் அட்டை வைத்திருக்கும் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

எல்ஐசி ஆதார் ஸ்டாம்ப் திட்ட தகுதி:

எல்ஐசி ஆதார் ஸ்டாம்ப் என்பது இணைக்கப்படாத, ஆதாயத்துடன் கூடிய எண்டோவ்மென்ட் உறுதி ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கான குறைந்தபட்ச வயது 8 ஆண்டுக்கு மேல் மற்றும் அதிகபட்ச வயது 55 ஆண்டுக்குள் ஆகும்.

திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச அடிப்படைத் தொகை ரூ.75,000 மற்றும் அதிகபட்ச அடிப்படைத் தொகை ரூ.3,00,000 ஆகும். இது ரூ.5,000 இன் மடங்குகளில் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்திற்கான பாலிசி கால அளவு 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை ஆகும். பாலிசியை ஆண்டுதோறும், அரையாண்டு, காலாண்டு அல்லது மாதந்தோறும் செலுத்தலாம்.

ரூ.3 லட்சம் காப்பீடு

உதாரணமாக, நீங்கள் 35 வயதில் எல்ஐசி ஆதார் ஸ்டாம்ப் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், 15 வருட பாலிசி காலத்திற்கு ஆண்டுதோறும் ரூ.10,000 பிரீமியம் செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்திற்கான காப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சம் ஆகும். அதே நேரத்தில், முதிர்ச்சியின் போது கூடுதலாக ரூ.2 லட்சத்தை நீங்கள் பெறுவீர்கள். அந்த வகையில் உங்களுக்கு ரூ.3 லட்சம் வரை ரிட்டன் கிடைக்க வாய்ப்புள்ளது.
பாலிசி காலத்தின் போது பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால், நாமினி அதன் பலனைப் பெறுகிறார்.

முதிர்வுப் பலனைத் தவிர, ஆதார் ஸ்டாம்ப் திட்டத்தில் முதலீடு செய்யும் நபர் லாயல்டி பலனையும் பெறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Invest as low as rs10000 to get up to rs300000 at maturity

Best of Express