இந்தியாவில், அஞ்சல் அலுவலக முதலீடுகள் முன்னணியில் உள்ளன. இந்த திட்டங்களில் அத்தகைய திட்டங்களில் ஒன்று தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கு முன்னணியில் உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, வட்டி வடிவில் மாத வருமானத்தைப் பெறலாம். ஜனவரி-மார்ச் 2023க்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும், நீங்கள் முதலீடு செய்த தொகையை முதிர்வுக்குப் பிறகு திரும்பப் பெறலாம் அல்லது மீண்டும் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு தனிநபர் கணக்கிற்கு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாகவும், கூட்டுக் கணக்கிற்கு ரூ.15 லட்சமாகவும் உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரை 2023 இல் அறிவித்துள்ளார்.
அந்த வகையில், ஒரு கணக்கிற்கு, திட்டத்தில் ரூ.9 லட்சம் வைப்புத் தொகையாக இருந்தால், மாதாந்திர வட்டி வருமானம் ரூ.5,325, கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தால் மாத வருமானம் ரூ.8,875 கிடைக்கும்.
இத்திட்டம் 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிடைக்கிறது. இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்த பணம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது அல்ல.
இதனால், இதில் பயமின்றி தாராளமாக முதலீடு செய்யலாம். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் பெயரில் கணக்கைத் தொடங்க பாதுகாவலர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/