Advertisment

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்.. ரூ.250 முதலீடு செய்து ரூ.5 லட்சம் பெறுவது எப்படி?

பெண் குழந்தைகளின் எதிர்கால பொருளாதார பாதுகாப்பு திட்டமான செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் ரூ.250 முதலீடு செய்து ரூ.5 லட்சம் வருமானம் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

author-image
Jayakrishnan R
Jan 19, 2023 12:21 IST
SBI fixed deposit latest interest rates

SBI FD vs Post Office time deposit

சுகன்யா சம்ரித்தி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) என்பது பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சேமிப்பு திட்டமாகும்.

இதனை 2015ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். பெண் குழந்தையின் எதிர்கால கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக எதிர்கால நிதியை உருவாக்க பெற்றோரை ஊக்குவிக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

Advertisment

சுகன்யா சம்ரித்தி கணக்கை, பெண் குழந்தைக்கு 10 வயது ஆவதற்கு முன், எந்தவொரு தபால் அலுவலகத்திலும் அல்லது வங்கிகளின் நியமிக்கப்பட்ட கிளைகளிலும் தொடங்கலாம்.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் பயன்கள்

  • செல்வ மகள் சேமிப்பு திட்டத்துக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  • ஒரு நிதியாண்டில் ரூ.1000 முதல் ரூ.150000 வரை முதலீடு செய்யலாம்.
  • 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் படி, சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.
  • பெண் குழந்தைக்கு 18 வயது வரும்போது சேமிப்பில் பாதி எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

ரூ.5 லட்சம் ரிட்டன் பெறுவது எப்படி?

செல்வ மகள் சேமிப்பு கணக்கை ரூ.250 செலுத்தி தொடங்குங்கள். அதனுடன் ரூ.750 கூடுதலாக அளித்து முதல் மாதத்தில் ரூ.1000 முதலீடு செய்யுங்கள்.

இவ்வாறு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 முதலீடு செய்தால் வருட இறுதியில் ரூ.12 ஆயிரம் முதலீடு செய்து இருப்பீர்கள். இந்த நிலையில் செல்வ மகள் சேமிப்பு கணக்கை குழந்தை பிறந்த மாதத்திலே தொடங்கி இருந்தால் 21 ஆண்டுகள் கழித்து நீங்கள் 3 லட்சத்து 47 ஆயிரத்து 445 ரூபாய் சேமித்து இருப்பீர்கள்.

உங்களுக்கு 5 லட்சத்து 27 ஆயிரத்து 445 ரிட்டன் வருமானமாக கிடைக்கும். மேலும் இந்தக் கணக்கை சரிவர கவனிக்காமல் விட்டால் மாதம் ரூ.50 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

#Sukanya Samriddhi Yojana #Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment