Post Office RD Scheme: இந்தியாவில் உள்ள சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கு போஸ்ட் ஆபிஸ் நம்பகமான ஸ்கீம்களை வழங்கிவருகிறது.
அவ்வாறு வழங்கப்படும் பல்வேறு திட்டங்களில், தபால் அலுவலக தொடர் வைப்பு கணக்கு, வங்கி FDகள் மற்றும் RD களுக்கு சிறந்த மாற்றாக உள்ளது.
10 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி. திட்டத்தில் முதலீடு செய்யலாம். குறைந்தப்பட்ச முதலீடு தொகை ரூ.100 ஆகும். இத்திட்டத்தில் 5.8 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் அல்லது 60 மாதங்களுக்குப் பிறகு முதிர்ச்சியடையும், எது முதலில் வருகிறதோ அது கணக்கில் கொள்ளப்படும்.
மேலும், கணக்கு தொடங்கி ஒரு வருடம் கழித்து, வைப்பாளர்கள் தங்கள் தொகையில் 50 சதவீதம் வரை எடுக்கலாம். டெபாசிட் செய்பவர்கள் கணக்கை உருவாக்கி ஒரு வருடத்திற்குப் பிறகு தங்கள் வைப்புத்தொகையில் 50 சதவீதம் வரை கடன் வாங்கலாம்.
ரூ.16 லட்சம் ரிட்டன் பெறுவது எப்படி?
ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 அல்லது ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.333 முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர் கிட்டத்தட்ட ரூ.16 லட்சத்தை வருமானமாக ஈட்டலாம்.
அதாவது முதலீட்டாளர் 10 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் முதலீடு செய்திருப்பார். அவருக்கு கூட்டு வட்டி மூலம் ரூ.6.26 லட்சம் வட்டியாக கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“