Post Office Scheme: இன்றைய காலகட்டத்தில் முதலீடுகளில் கவனமாக நிதி திட்டமிடல் தேவை. பெரும்பாலும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்யவே விரும்புகிறார்கள்.
அவர்களுக்கு அஞ்சல் அலுவலக முதலீடுகள் ஒரு சிறந்த தேர்வாகும்.
அந்த வகையில் கிராம் சுமங்கல் திட்டம் குறித்து பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் அதிகப்பட்ச காப்பீடு தொகை ரூ.10 லட்சம் ஆகும்.
மேலும் இதில் மணி பேக் வசதியும் உள்ளது, ஒருவேளை முதலீட்டாளர் இறக்க நேரிட்டால் பணம் நாமினி வசம் ஒப்படைக்கப்படும்.
கிராம் சுமங்கல் திட்டத்தில் 19 வயதுக்கு மேல் 40 வயதுக்கு உள்பட்ட நபர்கள் இணையலாம். பாலிசி காலம் 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை ஆகும்.
நீங்கள் 25 வயதில் பாலிசி வாங்கினால். உங்களுக்காக 10 இலட்சம் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். பாலிசி காலத்தை 15 ஆண்டுகள் வைத்திருந்தால், நிகர மாதாந்திர பிரீமியம் ரூ.6793 ஆக இருக்கும்.
பாலிசி காலத்தை 20 ஆண்டுகள் வைத்திருந்தால் மாத பிரீமியம் ரூ.5121 ஆக இருக்கும்.
அந்த வகையில், உங்களது 15 வருட பிரீமியம் காலத்திற்கான போனஸ் தொகை ரூ.6.75 லட்சமாக இருக்கும். பிரீமியம் காலம் 20 ஆண்டுகள் என்றால், போனஸ் தொகை ரூ.9 லட்சமாக இருக்கும்.
15 வருட பிரீமியம் காலத்திற்கான போனஸ் தொகை ரூ.6.75 லட்சமாக இருக்கும். பிரீமியம் காலம் 20 ஆண்டுகள் என்றால், போனஸ் தொகை ரூ.9 லட்சமாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil