Advertisment

அக்.2021 முதல் ஐ.ஆர்.டி.சி பங்குகள் 30 சதவீதம் சரிவு? இது வாங்குவதற்கான நேரமா?

பங்குச் சந்தைகளில் ஒட்டுமொத்த ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இந்த பங்கு பெஞ்ச்மார்க் குறியீடுகள் 5 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் முன்பதிவு: இதை செய்தால் கூடுதல் நன்மைகள்.. என்னது தெரியுமா?

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப் (IRCTC) பங்குகள் அக்டோபர் 2021 முதல் 30 சதவீதத்திற்கும் மேலாக சரிவைக் கண்டன.

அக்டோபர் 2019 இல் பட்டியலிடப்பட்ட முதல் 2 ஆண்டுகளில் ஏறக்குறைய 1900 சதவீத அதிவேக ஏற்றத்துக்கு பிறகு, இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப் (IRCTC) பங்குகள் அக்டோபர் 2021 முதல் 30 சதவீதத்திற்கும் மேலாக சரிவைக் கண்டன.

Advertisment

இந்த நிலையில், கடந்த 1 வருடத்தில், பங்குச் சந்தைகளில் ஒட்டுமொத்த ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இந்த பங்கு பெஞ்ச்மார்க் குறியீடுகள் 5 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளன.

நிஃப்டி இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 9 சதவீதம் உயர்ந்துள்ளது. 2023 YTD க்கு, நிஃப்டியில் சுமார் 7 சதவீத உயர்வுக்கு எதிராக பங்கு 5 சதவீதத்தை சேர்த்துள்ளது.

அக்டோபர் 2019 இல் இந்திய சந்தைகளில் IRCTC ஒரு சிறந்த அறிமுகத்தை கண்டது. இந்தப் பங்கு ₹644 இல் பட்டியலிடப்பட்டது, அதன் வெளியீட்டு விலையான ₹320 இலிருந்து 101 சதவீத பிரீமியம் அதிகமாக காணப்பட்டது.

இந்தநிலையில், பட்டியலிடப்பட்ட பிறகு, நிதிச் செயல்பாடுகள் போன்றவற்றின் பின்னணியில் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது.

அறிமுகமான 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அக்டோபர் 2021 இல், பங்கு அதன் வெளியீட்டு விலைக்கு எதிராக மிகப்பெரிய 1892 சதவீத லாபத்தைக் கண்டன.

இதற்கிடையில், பங்குகள் அக்டோபர் 2021 முதல் 30 சதவீதத்திற்கும் மேல் சரிவை நோக்கி நகர்ந்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stock Market Nifty Bombay Stock Exchange Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment