Advertisment

திருமணத்திற்கு பெர்சனல் லோன் வாங்குவது சரியான முடிவா?

ரூ. 25 லட்சம் வரை பெர்சனல் லோனை வாங்கிக் கொள்ள முடியும். அதனை 12 முதல் 60 மாதங்களில் வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.

author-image
WebDesk
New Update
personal loan for wedding

personal loan for wedding: கொரோனா காலங்களில் கூட்டமாக, அதிகம் நபர்களை கொண்டு திருமணங்களை நடத்தக் கூடாது என்ற அறிவிப்பு வருவதற்கு முன்பு வரை திருமணங்கள் என்பது மிகவும் அதிக செலவுகளை கொண்ட ஒரு வாழ்கை நிகழ்வாக பார்க்கப்பட்டது. புகைப்படம், வீடியோ, லைட்டிங், அலங்காரம், மண்டபம், சமையல் முதற்கொண்டு திருமணத்திற்கு தேனிலவு என்று அனைத்திற்கும் பணம் அதிக அளவில் செலவாகும். பெற்றோர்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பு அனைத்தும் ஒரு திருமணத்தில் காணாமல் போய்விடும். இது போன்ற சமயங்களில் நிதி நெருக்கடியை சமாளிப்பது இரு குடும்பத்தினருக்கும் மிக முக்கியமான காரியமாக இருக்கும். இது போன்ற சூழல்களில் லோன்கள் வாங்குவது சரியான முடிவாக இருக்குமா என்பதை நாம் இங்கே தெரிந்து கொள்வோம்.

Advertisment

திருமணம் என்பது ஒரு நாள் நிகழ்வல்ல. ஒரு வாழ்வை துவங்க இரு குடும்பத்தினரும் திட்டமிட்டு அதனை நிகழ்த்தி வைப்பார்கள். திருமணத்திற்கான திட்டமிடுதலில் பல்வேறு செலவுகள் அடங்கியிருக்கும். எதற்காக இந்த பணம் செலவிடப்படும் என்பதற்கான கட்டப்பாடுகள் இல்லாமல் பணம் கிடைப்பதால் பெர்சனல் லோன் மிகவும் சரியான தேர்வாக இருக்கும் என்று எம்பாக்கெட் நிறுவனத்தின் தலைவர் கௌரவ் ஜலான் கூறுகிறார்.

மற்ற கடன்களை போன்று இல்லாமல், இதில் பெற்ற கடன் தொகையை இதர அனைத்து திருமணச் செலவுகளையும் சமாளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, ஒரு திருமணத்திற்கு தனிநபர் கடன் வாங்குவது ஒரு புத்திசாலித்தனமான வழி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாலெண்ட்ஸ் (Indialends) நடத்திய ஆய்வின் படி, கொரோனா இரண்டாம் அலையின் போது, திருமணங்களுக்காக பெறப்படும் கடன் அளவு அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. முதல் அலையின் போது 20 முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் 22% தங்களின் திருமணத்திற்காக கடன் வாங்கியுள்ளனர். ஆனால் இது இரண்டாம் அலையின் போது 33% ஆக அதிகரித்துள்ளது.

இணையதளங்களில் வழியாக மிகவும் எளிய முறையில், குறைந்த வட்டி விகிதத்தில் உங்களால் கடன் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான அலைச்சலும் நேர விரயமும் குறையும் என்று ஜலான் கூறியுள்ளார்.

இந்த கடனை பெறுவதற்கான தகுதி அடிப்படை மிகவும் அதிகப்படியாக இல்லை. பெர்சனல் லோன் வாங்குவதற்கு நீங்கள் உங்கள் வீட்டு முகவரி சான்று மற்றும் வருமான சான்று போன்றவற்றை ஆவணங்களாக வங்கிகளில் சமர்ப்பித்தால் போதுமானது. மேலும் மிகவும் எளிமையான தவணைமுறைகள் உருவாக்கபப்ட்டுள்ளதால் எளிதில் இந்த கடன்களை அடைத்துவிடவும் முடியும். தங்களின் வருமானத்திற்கு ஏற்ற வகையில் திருப்பி செலுத்தும் பணத்தின் அளவை கடனாளார்கள் மாற்றிக் கொள்ள முடியும். ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் அவருக்கான வட்டி குறையவும் வாய்ப்பு உள்ளது. ஒருவர் ரூ. 25 லட்சம் வரை பெர்சனல் லோனை வாங்கிக் கொள்ள முடியும். அதனை 12 முதல் 60 மாதங்களில் வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment