Advertisment

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்: 15 நிமிடத்துல வேலைய முடிங்க

ஆன்லைனில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Missed ITR filing deadline Dont panic heres what you should do

Income Tax Filing

2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்று (ஜூலை 31) கடைசி நாள். இதன் பிறகு கால அவகாசம் வழங்கப்படாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. நேற்றைய தினம் வரை 6 கோடி பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இன்று தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் ஆன்லைனில் எளிதாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

முக்கிய ஆவணங்கள் தேவை

இ-ஃபைலிங் போர்டலில் நிரப்பப்பட்ட ஐ.டி.ஆர் படிவங்கள் வழங்கப்படுகிறது என்றாலும் சிலவற்றிக்கு தாமாகவே கணக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். மூலதன ஆதாயங்கள் (capital gains) போன்ற சில வருமானங்களுக்கு தாமாகவே கணக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது, சில முக்கிய ஆவணங்கள் தேவை. அவை,

படிவம் 16

படிவம் 16A

படிவம் 26AS

மூலதன ஆதாய அறிக்கைகள் (Capital gains statements)

வரி சேமிப்பு முதலீட்டு சான்று (Tax saving investment proof)

பான் கார்டு

மருத்துவ காப்பீட்டு அறிக்கை

ஐ.டி.ஆர் தாக்கல் செய்வது எப்படி?

  1. முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்லவும்.
  2. உங்கள் பயனர் ஐடி (PAN), பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா உள்ளிட்டவற்றை பதிவிடவும்.
  3. 'இ-ஃபைல்' மெனுவைக் கிளிக் செய்து, 'வருமான வரி ரிட்டர்ன்' இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  4. வருமான வரி அறிக்கை (ITR) படிவத்தைத் தேர்வு செய்யவும். நீங்கள் படிவம் 16-ஐ கொண்ட சம்பளம் பெறும் வரி செலுத்துபவராக இருப்பதால் நீங்கள் ITR-1 அல்லது ITR-2 ஆப்ஷனைப் பயன்படுத்தலாம்.
  5. அடுத்து ஐ.டி.ஆர் தாக்கல் செய்ய விரும்பும் மதிப்பீட்டு ஆண்டை (AY) தேர்வு செய்யவும். 2023-24 மதிப்பீட்டு ஆண்டை தேர்வு செய்ய வேண்டும்.
  6. படிவத்தில் உள்ளிடப்பட்ட எல்லா தரவையும் சரிபார்த்து, சமர்ப்பிக்கவும்.
  7. உங்கள் ரிட்டனைச் சமர்ப்பித்த பிறகு, ஆதார் ஓ.டி.பி போன்ற ஆப்ஷன்களை கொடுத்து உறுதி செய்யவும்.
  8. அப்லோடு என்று கொடுத்து இ-வெரிஃவை ரிட்டன் எனக் கொடுக்கவும்.
  9. உங்கள் எல்லா விவரங்களையும் மீண்டும் சரிபார்த்து படிவத்தைப் பதிவேற்றவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Income Tax Return Filing
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment