அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஜெஃப் பெஸாஸ் நேற்று உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார். இவரது சொத்து மதிப்பு 90.6 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகின் முதல் பணக்காரராக இருந்த பில் கேட்ஸை இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளி பெஸாஸ் முதலிடம் பிடித்தார். அந்த நேரத்தில், அமேசான் நிறுவனத்தின் பங்கு வர்த்தக மதிப்பு 90.60 அமெரிக்க மில்லியன் டாலராகவும், பில்கேட்ஸின் பங்கு வர்த்தக மதிப்பு 90 மில்லியன் டாலராகவும் இருந்துள்ளது.
இதனை ப்ளூம்பர்க் மற்றும் ஃபோர்ப்ஸ் தெரிவித்தது. வியாழக்கிழமையன்று அமேசான் பங்குகள் 1.6% உயர்வாகத் தொடங்கியது. இதனால் பெஸாஸ் சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர்கள் அதிகரிக்க பில்கேட்சைப் பின்னுக்குத் தள்ளினார்.
கடந்த மே, 2013 முதல் ப்ளூம்பர்க் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார். ஆனால், பங்குகள் உயர்ந்ததன் காரணமாக அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஸாஸ் சிறிது நேரத்திற்கு முதலிடத்தில் இருந்தார்.
சில மணி நேரத்திலேயே அமேசான் நிறுவனத்தின் பங்கு விற்பனை சரிந்ததால், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் மீண்டும் முதலிடத்திற்கு வந்தார்.