ஜியோவின் ரூ.19 ரீசார்ஜ் திட்டம் குறித்து தெரியுமா?

28 நாட்களுக்கு செயல்படும் இந்த திட்டத்தில், 150 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது

வாடிக்கையாளர்களை கவர பிரபல முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ  போன்றவை மிகக் குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்னர். பல அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் ஏர்செல் நிறுவனம் ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாததாலும், அதிகப்படியான கடன் சுமையில் சிக்கிக் கொண்டதாலும்  திவால் ஆகிவிட்டதாக அறிவிப்பும்படி கடிதம் வெளியிட்டது. வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை மட்டுமே ஏர்செல் சேவை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்சமயம் களத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோவிற்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.  ஏர்செல் வாடிக்கையாளர்கள் பலர் ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் சேவையை பின் தொடருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த ஜியோ நிறுவனம் தற்போது மிகக் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோவின் இந்த புதிய அறிவிப்புகள்  வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதன்படி, ஜியோவின் ரூ. 19 ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு,  0.15ஜிபி டேட்டா, நாள் தோறும் 20 இலவச குறுங்செய்திகள் மற்றும் அன்லிமடெட் வாய்ஸ் சேவையும் வழங்கப்படுகிறது. ஒரு நாள் மட்டுமே செயல்படும் இந்த திட்டம் செயல்படும்.

ஜியோவைப் போல் ஏர்டெல் நிறுவனமும்,  ரூ.29 க்கு பிரீப்பெய்ட் ப்ளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, 28 நாட்களுக்கு செயல்படும் இந்த திட்டத்தில்,  150 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது.

×Close
×Close