தங்கத்தை டிஜிட்டலில் பேப்பர் கோல்டு ஆக சேகரிக்கும் பழக்கம் இந்திய மக்களிடையே அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், சில முன்னணி பொருளாதார வல்லுநர்கள் டிஜிட்டல் தங்கத்தில் உள்ள பாதகங்கள் குறித்து விவரிக்கின்றனர்.
அதுவும் கர்வா சௌத், தந்தாரேஸ் மற்றும் தீபாவளி உள்ளிட்ட காலக்கட்டங்களில் ஏன் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யக் கூடாது என்பது தொடர்பாக 5 காரணிகளை பார்க்கலாம்.
1) பாதுபாப்பு இல்லை
இந்தியாவில் டிஜிட்டல் கோல்டு முதலீடுகள் இன்னமும் முறைப்படுத்தப்படவில்லை. மேலும் பாதுகாப்பானதாகவும் இல்லை. இது தொடர்பாக செபி (பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம்) பலமுறை முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளது.
2) தங்கமாக மாற்றும்போது பணம் அதிகரிக்கும்
சில நகைக்கடைக்காரர்கள் வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் டிஜிட்டல் தங்கத்தை தேவைப்படும் போது உண்மையான நகைகளாக மாற்ற அனுமதிக்கின்றனர்.
இருப்பினும், விலைகள் டிஜிட்டல் கோல்டு கிராம்-டு- ஆஃப் லைன் கிராமுக்கு பொருந்தாது. டிஜிட்டல் தங்கம் விலை எப்போதும் நகை விலையை விட குறைவாக இருக்கும்.
மேலும், பரிமாற்றத்தின் போது, வாடிக்கையாளர்கள் வரி மற்றும் மேக்கிங் கட்டணங்களின் அடிப்படையில் கூடுதல் செலவுகளைச் செலுத்த வேண்டும்.
3) தங்கம் உண்மையில் ஒரு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உங்களால் சரிபார்க்க முடியாது
ஆன்லைனில் விற்கப்படும் ஒவ்வொரு கிராம் டிஜிட்டல் தங்கமும் பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உங்களால் சரிபார்க்க முடியாது.
4) உங்களது முதலீட்டுக்கு வட்டி இல்லை
சில டிஜிட்டல் தங்க விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மிகக் குறைந்த தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் டிஜிட்டல் தங்கத்தை வாங்க அனுமதிக்கின்றனர்.
இருப்பினும், வாடிக்கையாளர்கள் அத்தகைய டெபாசிட்டுகளுக்கு எந்த வட்டியையும் பெறுவதில்லை. டிஜிட்டல் தங்கம் வாங்குபவர்கள் எதிர்பார்க்கும் லாபம் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்தால் மட்டுமே சாத்தியதாகும்.
5) சேமிப்பு வசதி இலவசம் அல்ல
வாடிக்கையாளர்கள் வாங்கும் டிஜிட்டல் தங்கத்திற்கு நிகரான தங்கத்தை காப்பீடு செய்யப்பட்ட மற்றும் சான்றளிக்கப்பட்ட பெட்டகங்களுக்குள் மிகவும் பாதுகாப்பான வளாகத்தில் சேமித்து வைப்பதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த சேமிப்பு வசதி எப்போதும் இலவசம் அல்ல.
பொதுவாக, ஐந்து ஆண்டுகளுக்கு இலவச சேமிப்பு வழங்கப்படுகிறது. அதன் பிறகு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாதாந்திர அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
என்ன செய்யலாம்?
தங்கத்தில் டிஜிட்டல் முறையில் முதலீடு செய்வதில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், சிறந்த தேர்வாக இந்திய அரசின் இறையாண்மை தங்கப் பத்திரங்களை (SGBs) தேர்வு செய்யலாம்.
இவைகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நேரடியாக வருகின்றன. தங்கத்தின் விலை உயர்வால் கிடைக்கும் ஆதாயங்களுக்கு கூடுதலாக வருடாந்திர வட்டியை வழங்குகின்றன.
கவனம் தேவை..
பொதுவாக டிஜிட்டல் தங்கத்தை விற்கும் நிறுவனங்கள், இவை, சொத்துக்கள் என உங்களை நம்ப வைக்க எல்லா வழிகளிலும் முயற்சி செய்கின்றன.
இந்த நிலையில, கர்வா சௌத், தந்தேராஸ் மற்றும் தீபாவளிக்கு முன்னதாக, டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய உங்களை ஈர்க்கும் வகையில் பல ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் நிறுவனங்னள் கவர்ச்சி விளம்பரங்களை காண்பித்துவருகின்றன. ஆகவே இந்த விஷயத்தில் கவனம் தேவை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.