தெரிந்து கொள்வோம் ஜிஎஸ்டி!! சந்தேகமும், விளக்கமும் 2

ஜிஎஸ்டி பதிவு சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள முடியுமா?

விண்ணப்பம் அளித்த தேதியிலிருந்து 15 வேலை நாட்களுக்குள் தகவல்களை திருத்தம் செய்ய அனுமதிக்கப்படும். ஆனால் குறிப்பிட்ட சில முக்கியமான தகவல்களை திருத்தம் செய்ய அதற்குரிய அதிகாரிக்கு மட்டுமே அனுமதியுண்டு. எனினும் ஜிஎஸ்டி பதிவிற்கான இணையதளம் மூலம் பதிவு சான்றிதழின் இதர தகவல்களை திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

ல மாநிலங்களில் தொழில் செய்பவர் ஒரே ஒரு இடத்தில் ஜிஎஸ்டி பதிவு செய்து கொள்ளலாமா?

ஜிஎஸ்டி சட்டம் இதை அனுமதிக்கவில்லை. சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி சட்டப்படி ஒரு நபர் பல மாநிலங்களில் வர்த்தகம் செய்பவராக இருந்தால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டும்.

×Close
×Close