scorecardresearch

தொழில் அதிபராக ஆசையா? முத்ரா கடன்களை அறிந்து கொள்ளுங்கள்!

மூன்று வகைகளில் வழங்கப்படும் முத்ரா கடன்கள், கடன் வாங்குபவர்களின் வளர்ச்சி அல்லது மேம்பாடு மற்றும் நிதித் தேவைகளின் கட்டத்தைக் குறிக்கிறது.

Know How Can You Benefit From MUDRA Loans
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 40.82 கோடி பயனாளிகளுக்கு ரூ.23.2 லட்சம் கோடியை கடனாக வழங்கியுள்ளன.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்பது கார்ப்பரேட் அல்லாத சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குவதற்காக 2015 இல் தொடங்கப்பட்ட திட்டமாகும். இந்தக் கடன்கள் PMMY இன் கீழ் முத்ரா கடன்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

இவைகள் வணிக வங்கிகள், கிராம வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், கடன் பெறுபவர் மேலே குறிப்பிட்டுள்ள கடன் வழங்கும் நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றை அணுகலாம் அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இது, உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளில் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்காகவும், விவசாயத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காகவும் கடன் வழங்கப்படுகிறது.
இதுவரை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 40.82 கோடி பயனாளிகளுக்கு ரூ.23.2 லட்சம் கோடியை வழங்கியுள்ளன.

மேலும், மூன்று வகைகளில் வழங்கப்படும் முத்ரா கடன்கள், கடன் வாங்குபவர்களின் வளர்ச்சி அல்லது மேம்பாடு மற்றும் நிதித் தேவைகளின் கட்டத்தைக் குறிக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Know how can you benefit from mudra loans

Best of Express