Advertisment

தினமும் ரூ.87 முதலீடு செய்தால் ரூ.11 லட்சம் ரிட்டன்: எல்.ஐ.சி.யின் இந்தப் பாலிசியை பாருங்க!

தினமும் ரூ.87 முதலீடு செய்து ரூ.11 லட்சம் ரிட்டன் கிடைக்கும் எல்.ஐ.சி. பாலிசி குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
6 banks offering up to 7 PC interest rate on savings accounts

ஒரு பெண் 55 வயதாக இருந்தால், அவள் 15 வருட பாலிசி காலத்தை தேர்வு செய்யலாம்.

LIC Aadhaar Shila: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

அத்தகைய திட்டங்களில் ஒன்று எல்ஐசி ஆதார் ஷீலா திட்டமாகும், இது ஒரு நாளைக்கு வெறும் ரூ.87 முதலீட்டில் நீண்ட காலத்திற்கு கணிசமான வருமானத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் அறிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் தொடர்பாக பார்க்கலாம்.

Advertisment

ஆதார் அட்டை வைத்திருக்கும் பெண்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தகுதியுடையவர்கள்.

தகுதி பெற பெண்ணின் வயது 8 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். பாலிசி கால அளவு 10 முதல் 20 ஆண்டுகள் வரை தேர்ந்தெடுக்கலாம்.

மேலும், பெண்ணின் அதிகபட்ச வயது 70 ஆக இருக்கலாம். உதாரணமாக, ஒரு பெண் 55 வயதாக இருந்தால், அவள் 15 வருட பாலிசி காலத்தை தேர்வு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை இருக்கும்.

11 லட்சம் பெறுவது எப்படி?

எல்ஐசி ஆதார் ஷீலா பாலிசியின் மூலம் முதிர்ச்சியின் போது ரூ.11 லட்சத்தை திரட்டுவதே உங்கள் இலக்காக இருந்தால், ஒரு நாளைக்கு ரூ.87 முதலீடு செய்ய வேண்டும்.

இது ஆண்டு பிரீமியமாக ரூ.31,755 ஆக இருக்கும். 10 வருட காலப்பகுதியில், உங்களின் மொத்த டெபாசிட் தொகை ரூ.3,17,550 ஆக இருக்கும். 70 வயதில், நீங்கள் திரட்டப்பட்ட தொகையை திரும்பப் பெற முடிவு செய்தால் ரூ.11 லட்சம் கிடைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lic Lic Scheme Lic Policy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment