தனியார் VS பொதுத் துறை வங்கிகள்: ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு எதில் பெஸ்ட் ரிட்டன்?

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு எதில் சிறந்த வட்டி கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு எதில் சிறந்த வட்டி கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

author-image
Jayakrishnan R
New Update
Latest FD interest rates in public and private banks

ஃபிக்ஸட் டெபாசிட்டில் ஒரு வங்கி மற்றொரு வங்கிக்கு வட்டி மாறுபடும்.

உயரும் வட்டி விகிதங்கள் நிலையான வைப்புகளை (FDs) கவர்ச்சிகரமான முதலீட்டு விருப்பமாக மீண்டும் மாற்றியுள்ளன. வங்கிகளில் (சிறு நிதி வங்கிகள் தவிர்த்து) நிலையான வைப்புத்தொகையின் மீதான வட்டி விகிதம் 8 சதவீதத்தை எட்டியுள்ளது.
இது ஒரு வருடத்திற்கு முன்பு 5 முதல் 6.5 சதவீதமாக இருந்தது. இதற்கிடையில், மூத்த குடிமக்கள் நிலையான வைப்புகளுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி விகிதத்தைப் பெறுவகின்றனர்.

வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடுவது ஏன்?

Advertisment

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த ஆண்டில் ரெப்போ விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) அதிகரித்துள்ளது. இதனால், வங்கிகளும் வட்டி விகித உயர்வின் பலன்களை தங்களுடைய ஃபிக்ஸட் டெபாசிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளன.
இருப்பினும், நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகித உயர்வின் அளவு சீராக இல்லை. ஒரு வங்கி மற்றொரு வங்கிக்கு இடையே வட்டி விகிதங்கள் மாறுபடும். மேலும், நிலையான வைப்புகளின் வட்டி விகிதங்கள் காலத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன.

பொது மற்றும் தனியார் வங்கிகளில் சமீபத்திய FD வட்டி விகிதங்கள்

ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் போது உங்கள் வங்கியை எப்படி தேர்வு செய்ய வேண்டும்? இதற்குப் பதிலளிக்க, நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் இரண்டு விஷயங்களைப் பார்க்க வேண்டும்.

அந்த வகையில், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்கும் தற்போதைய FD வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.

Advertisment
Advertisements

மூன்று வருட FD காலத்துக்கு, பாரத ஸ்டேட் வங்கி (SBI) 6.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி இதேபோன்ற காலவரையறை கொண்ட வைப்புகளுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
யூனியன் வங்கியில் மூன்று வருட FDக்கு, வட்டி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும். இதற்கிடையில், DCB வங்கி மூன்று ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு அதிகபட்சமாக 8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

முதலீட்டாளர்கள் சம்பாதிக்கக்கூடிய அடுத்த சிறந்த வட்டி விகிதம் IndusInd வங்கியில் 7.75 சதவீதம் ஆகும். எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் 7.2 சதவீத வட்டியை வழங்குகின்றன.
தொடர்ந்து, ஐந்தாண்டு நிலையான வைப்புகளுக்கு, எஸ்பிஐ மற்றும் பிஎன்பி இரண்டும் 6.5 சதவீதத்தை வழங்குகின்றன.

டிசிபி வங்கி ஐந்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. HDFC வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் YES வங்கியில் ஐந்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு முதலீட்டாளர்கள் 7 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: