Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய இண்டஸ்இந்த் வங்கி: புதிய விகிதம் இதுதான்!

ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டை இண்டஸ்இந்த் வங்கி உயர்த்தியுள்ளது. இந்தப் புதிய விகிதம் ஆக.5ஆம் தேதி முதல் அமலுக்குவருகிறது.

author-image
WebDesk
New Update
2000 money 5

தற்போதைய நிலவரப்படி 7 நாள்கள் முதல் 30 நாள்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வங்கி 3.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டை இண்டஸ்இந்த் வங்கி உயர்த்தியுள்ளது. இந்தப் புதிய விகிதம் ஆக.5ஆம் தேதி முதல் அமலுக்குவருகிறது.

வங்கியின் இணைய தளத்தில் அடிப்படை புள்ளிகள் 25 பிபிஎஸ் உயர்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 7 நாள்கள் முதல் 30 நாள்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வங்கி 3.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

Advertisment

தொடர்ந்து, 31 முதல் 45 நாள்கள் வரையிலான திட்டங்களுக்கு 4 சதவீதம் வட்டியும், 46 நாள்கள் முதல் 60 நாள்கள் வரையிலான முதலீட்டுக்கு 4.5 சதவீதம் வட்டியும், 61 நாள்கள் முதல் 90 நாள்கள் வரையிலான டெபாசிட்டுக்கு 4.6 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.

அதிகப்பட்சமாக ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.50 சதவீதம் வட்டி வழங்கப்படும். மேலும், 2 ஆண்டுகளுக்கு மேலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசி்ட

வங்கி மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு கூடுதலாக 0.75 சதவீதம் வட்டி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment