scorecardresearch

எல்.ஐ.சி. நிகர லாபம் ரூ.8,349 கோடி.. 40 சதவீதம் உயர்வு

எல்.ஐ.சி.யின் நிகர லாபம் 40 சதவீதம் உயர்ந்து ரூ.8,349 கோடி ஆக உள்ளது. பிரிமீயம் வருவாய் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

LIC Jeevan Anand Plan Premium payment benefits other details
ஜீவன் ஆனந்த் பாலிசியின் மூலம், நீங்கள் ரூ. 25 லட்சம் வரை ரிட்டன் பெறலாம்.

நாட்டின் மிகப்பெரிய காப்பீடு பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் மூன்றாம் காலாண்டு நிதி நிலை அறிக்கை வியாழக்கிழமை (பிப்.09) வெளியானது.
இந்த அறிக்கையில், “எல்.ஐ.சி.யின் நிகர லாபம் 40 சதவீதம் உயர்வு கண்டு ரூ.8,349 கோடி ஆக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ. 211 கோடியாக உள்ளது.
தொடர்ந்து, எல்ஐசியின் நிகர பிரீமியம் வருமானம் கடந்த காலாண்டில் ரூ.98,052 கோடியிலிருந்து 15% அதிகரித்து ரூ.1.12 லட்சம் கோடியாக உள்ளது.

இதற்கிடையில், நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, நிறுவனத்தின் பங்குகள் 0.53% உயர்ந்து ரூ.613.35 இல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Lic net profit jumps 40 times to rs 8349 crore